உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

அறிவுரைக்கோவை

87

விளைவிக்கத் தக்க பொய் இவர் வாயில் வருவதில்லை. மனநலன் நன்கு வாய்ந்தாரையன்றி, ஏனையோரை இவர் ஒரு பொருட்படுத்தார். வெளிமினுக்கும் பட்ட ஆரவாரங்களும் இவரை மருட்ட மாட்டவாயின.

பெரும்பாலும்

மிக இளைஞராயிருந்த காலந்தொட்டே இவர் எம் அறிவுரைகளைப் ஏற்று ஒழுகும் யல்பினராயிருந்தார்.நெடுங்காலத்திற்கு முன் ஒருகால் இவர் ஆரவாரமான பட்டங்கள் சூட்டிக் கொள்வதில் அவாவுடையராய், அவ்வாறு தாம் புனைந்துகொண்ட பட்டங்கள் பதித்த தாள் ஒன்றை எம்பாற் கொணர்ந்து காட்டினார். அதுகண்டு, யாம், “நம் மக்கள் முன்னேற்றத் திற்குஞ் சிவபிரான் றிருவடிக்கும் நாம் இயற்றுந் தொண்டு அவ்வுண்மையே நோக்கியதாய் இருக்க வேண்டுமே யல்லாமல், ஆரவாரமான பட்டங்கள் சூட்டிக் கொள்வதற் கன்று நடைபெறல் ஆகாது. வேண்டுமாயின் நீ தமிழா சிரியராய் வேலைபார்க்கும் நிலையைச் சுட்டிப் 'பண்டிதர்’ தமிழாசிரியர்', என்பவைகளை மட்டும் நின்பெயரோடு சேர்த்து வழங்கலாம்" என்றேம். அது முதல் இவர் வெளி யாரவாரமான பட்டங்கள் புனைந்து கொள்வதை அறவே விடுத்தார்.

பின்னும், இவர் ளைஞராயிருந்தபோது தமிழிற் பாட்டுகள் கட்டுவதில் மிக்க சுருசுருப்புடையராயிருந்தார். ஒருகால் யாம் இவரை நோக்கி வரை நோக்கி "நமது தமிழ் மொழியிற் கோடிக் கணக்கான பாட்டுகள் பாடப் பட்டிருக்கின்றன. ஆனால், உரை நூல்களோ சிலவும் இல்லை. பொதுமக்கட்கு இனி உரைநூல்களே வேண்டும். ஆதலால் நீ பாட்டுப் பாடுவதை விடுத்து உரை எழுதுவதிலேயே

பழகல்

வேண்டும்” என்றேம். அதுமுதல் இவர் பாட்டுப் பாடுதலை விடுத்து உரை எழுதுதலில் திரும்பினார். இங்ஙனமே இவர் தமது இளமைக் காலத்தே எம் அறிவுரைகளைக் கேட்டு அவற்றின்படி நடந்த வகைகள் பல. ஆசிரியர் கூறும் அறிவுரையை ஏற்று நடவாத இஞ்ஞான்றை மாணவர்க்குத் திருநாவுக்கரசின் அரியநடை நல் விளக்காக ஒளிரற்பாலது.

இனி இவர் தம் கருத்துக்கு மாறானவரிடத்தும் பகைமை யின்றி அன்பினால் அளவளாவும் இயல்பினரென்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/120&oldid=1585712" இலிருந்து மீள்விக்கப்பட்டது