உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

மறைமலையம் 19

குணம்

முன்னரே எடுத்துச் சொன்னோம். இவ்வருங் எல்லார்க்கும் வாய்ப்பதன்று. கல்வி யறிவு வாய்ந்த நம்மனோர் எல்லாரும் இந்நல்லியல்பின் விழுப்பத்தை நன்குணர்ந்து என்றைக்கு அதனை யுடையராய் ஒழுகத் அன்று முதற்றான் நம் நாடு செழிப்புறும். நம் அருமைத் திருநாவுக்கரசின் இந்நல்லியல்பும் நம் தமிழறிஞர்க்கும் பிறர்க்கும் ஓர் எடுத்துக்காட்டாக நிற்கற்பாலதாகும்.

தலைப்படுகின்றனரோ

இனி, இவர் தமது சிற்றிளமைப் பருவந் தொட்டே தமது வருத்தத்தையும் பாராமற் பிறர்க்குதவி செய்யும் இரக்க நெஞ்சமும் நல்லெண்ணமும் உடையர். இவர் எம்பாற் கல்வி பயின்று கொண்டிருத்த அந்நாளில் ஒருபோது எம் மூத்த மகள் மிகக் கொடிய காய்ச்சலாற் பற்றப்பட்டு உணர்விழந்து கிடந்தாள். யாங்கள் எல்லோமும் பெருந்திகிலும் பெருங் கவலையுங் கொண்டு அம்மகளுக்கு வந்த அந்நோய் தீர்க்கத் தக்க மருத்துவரை ஒருவர் பின்னொருவராய் வைத்துப் பார்த்து வந்தோம். அவ்வுற்ற நேரத்தில் நாகைக் கோபாலகிரட்டிணனும் நம் அருமைத் திருநாவுக்கரசும் அல்லும் பகலும் எம்மை யகலாதிருந்து பலவகை உதவிகளுஞ் செய்து வந்தார்கள். நோயானது மிக முறுகிப் பேரிடர் பயப்பதாய் நின்ற ஒரு நாளிரவில், இவ்விருவருஞ் சென்று வேறோர் ஆங்கில மருத்துவரை அழைத்து வந்தனர். அப்போது இரவு மணி பதினொன்றுக்குமேல் இருக்கும். வந்த அம்மருத்துவர் தக்க மருந்து கொடுத்து, வேறு சில நுட்ப முறைகளுஞ் செய்து, கடைசியாகப் பாலிற் கலந்து கொடுக்கப் பனிக்கட்டிகள் வேண்டும் என்றனர். அஞ்ஞான்று யாம் சென்னையில் மண்ணடிக்கு அருகிலுள்ள அரமனைக்காரன் தெருவில் ஒரு வீட்டின் மேன்மாளிகையிற் குடியிருந்தேம். யாம் இருந்த அப்பகுதியில் அந்நேரத்தில் எங்கும் பனிக்கட்டிகள் கிடைக்கவில்லை. அதன்மேல் திருநாவுக்கரசு எப்படியாவது அவற்றைக் கொண்டு வருதற் கெண்ணி, எழும்பூருக்கு அருகிற் பனிக்கட்டி செய்யுந் தொழிற் சாலைக்கே போகப் புறப்பட்டார்; கோபாலகிருட்டிணனும் அவருடன் சென்றார். மின்சார வண்டி யாவது குதிரை வண்டி மாட்டு வண்டிகளாவது அந்நேரத்தில் கிடையாமையால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/121&oldid=1585713" இலிருந்து மீள்விக்கப்பட்டது