உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கோவை

89 சல்ல

அவர்கள் அந்நள்ளிரவில் கால்நடையாகவே க வேண்டுவதாயிற்று. யாமிருந்த இடத்திற்கும் பனிக்கட்டித் தாழிற்சாலைக்குஞ் சிறிதேறக்குறைய மூன்றுமைல் இருக்கும். இவர்களிருவரும் பனிக்கட்டிகள் வாங்கிக் காண்டு திரும்பி வருகையில் இரவு மூன்றுமணி இருக்கும். இவர்கள் அன்றிரவு செய்த அச்செயற்கரிய உதவியால் எம்மகள் நோய் நீங்கி உயிர் பிழைத்தாள். இங்ஙனம் உற்ற நேரத்தில் எவ்வகை இடைஞ்சலுக்கும் அஞ்சாது நின்று நம்பாலன்புடையார்க்கு உதவி செய்யும் விழுமிய நல்லியல்பு இவர்தம் இறுதி நாள்ளவும் இவர்க்கிருந்தது. சென்னையிலிருந்த காலமெல்லாம் யாமும் எம்மைச் சார்ந்தாரும் அடுத்தடுத்துக் குளிர் காய்ச்சலாற் பற்றப்பட்டு வருந்தாநின்றேம். இதனைக் கண்ட திருநாவுக்கரசு சன்னைக் குடியிருப்புத் தங்களெல்லார்க்குஞ் சிறிதும் இசையாததா யிருக்கின்றது. உடல்நல மனநலங்களுக்கு இசைந்த பல்லாவரமே தங்களெல்லார்க்கும் பொருந்துவ தாகும்” என்று அடிக்கடி வற்புறுத்திச் சொல்லி எம்மை 1911 ஆம் ஆண்டிற் பல்லாவரத்திற் குடியேற்றி வைத்து உதவி செய்தார்.

66

யாம்

சன் தமிழ்த்தொண்டு

ங்ஙனம் பலவகையாலுஞ் சிறந்த தவப்பிறவியினரான நம் அருமைத் திருநாவுக்கரசு நம்மனோரை யெல்லாம் இத்துணை விரைவில் விட்டு நீங்கியதான பெருங்குறை இத்தமிழகத்துக்கு எளிதிற் றீருமோ! எல்லாம் வல்ல சிவபிரான் இவரது சிறந்த உயிருக்கு மறுமை யுலகில் நீண்ட காலம் ஆறுதலைத் தந்தருளி, அதன் பின் இவர் மீண்டும் நம்மிடையே எல்லா வசதிகளோடும் பிறந்து, தாம் அரைகுறையாய் விட்டுச் சிவத்தொண்டுகளை நன்கினிது முடித்து அதன்மேற் பிறவியெடாராய்ச் சிவபிரான் றிருவடி நீழலில் வைகிப் பேரின்பம் நுகர்ந்திருப்பாராக வென அப்பெருமான் திருவடிப் போதுகளை இறைஞ்சி வேண்டுகின்றேம். இவர் தம் முதன் மனைவிக்குப் பிறந்த ஒரு புதல்வன் உளன். முதன் மனைவி காலமான பின் மணந்து கொண்ட இவர்தம் இரண்டாம் மனைவிக்கு ஐந்து பெண் பிள்ளைகள் உளர். இவர் தம்பியர் இருவர் உளர். இவர் தந் தந்தையார் ஆண்டில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/122&oldid=1585714" இலிருந்து மீள்விக்கப்பட்டது