உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

மறைமலையம் 19

அருளிச் செய்த நூல்களிலும் பதிகங்களிலும் எடுத்து விளக்கி வணங்கி வந்திருக்கின்றார்கள்.

"மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த

தேவரும் காணாச் சிவபெருமான்"

என்றும்,

"தேவர்கோ அறியாத தேவதேவன்

செழும்பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை மூவர் கோனாய்நின்ற முதல்வன்

என்றும் மாணிக்கவாசகப் பெருமான் எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளையே சிவமென்னும் பெயரால் வாழ்த்தி வணங்கியிருப்பது நன்கு விளங்கும்.

சிறு

ஆனால், வடநாடுகளில் கோடிக்கணக்கான தெய்வங்களை வணங்கி, அவற்றுக்கு ஊனுங் கள்ளும் படைத்து வெறியாட்டு வேள்விகள் எடுத்த ஆரியர்கள் இத் தென்றமிழ் நாட்டுக்கு வந்து குடியேறித் தாம் வணங்கிய சிறுதெய்வ வணக்கத்தையும் அவற்றிற்காக எடுத்த வெறியாட்டு வேள்விகளையும் அச்சிறு தெய்வங்களின் மேற் கட்டிவிட்ட புராணக்கதைகளையும் இந் நாடுகளிற் பரவ வைத்தார்கள். இந்நாடுகளில் நாகரிகமும் கல்வியறிவும் இல்லாத கீழ் மக்களை ஆரியர் நடைகளை மிகுதியாய்ப் பின்பற்றிலாயினர். அது கண்ட தமிழ்ச் சான்றோர்கள் ஆரியர் வணங்கிய சிறுதெய்வ இழிவும், தமிழர் வணங்கும் முழுமுதற் கட வுளாகிய சிவத்தின் உயர்வும் புலப்படுத்தல் வேண்டித் தாமும் பல ராணக்கதைகளை உண்டாக்கலாயினர். வ்வாறு எழுந்த பலப்பல புராணக்கதைகளுட் கடவு ளிலக்கணத்துக்குப் பொருந்துவனவும் அதற்குப் பொருந்தா தனவும் இருக்கின்றன. அவைகளை யெல்லாம் செவ்வையாக ஆராய்ந்து பார்த்துப் பொருத்தமானவைகளை விளக்கி எழுதிப் பொருந்தாதவைகளை விலக்கி விடுவதற்கு உரிய சீர்திருத்தம் முதன்மையாகச் செயற்பாலதாகும்.

நம் ஆசிரியர்கள் தமது காலத்திருந்த பொது மக்களின் மனச் சார்பை அறிந்து, அவர்கள் பொருட்டுத் தழுவிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/125&oldid=1585717" இலிருந்து மீள்விக்கப்பட்டது