உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

உண்

7. சீர்திருத்தக் குறிப்புகள்

உண்மை அன்பர்கள் வற்புறுத்துக் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி, இக்காலத்துக்கு இன்றியமையாது வேண்டப்படும் சீர்திருத்தக் குறிப்புகள் சிலவற்றை இங்கு எடுத்துக் காட்டுகின்றோம்.

சமயச் சீர்திருத்தம்

தென்னாட்டிலுள்ள தமிழர்களாகிய நாம் தொன்று தொட்டு ஒரே முழுமுதற் கடவுளை வணங்கி வருகின்றோம். அம் முழுமுதற் கடவுளுக்குச் ‘சேயோன்,’ ‘மாயோன்’, முக்கண்ணன்' என்னும் பெயர்கள் வழங்கி வந்திருக்கின்றன.

இச்சிறப்புப் பெயர்களாற் குறிக்கப்படாத போது, வாலறிவன்’, 'மலர்மிசை யேகினான்’, 'வேண்டுதல் வேண்டாமை யிலான்', 'பொறிவாயிலைந் தவித்தான்', தனக்குவமை யில்லாதான்’ அறவாழியந்தணன், ‘எண் குணத்தான்’ றைவன்’, ‘கடவுள்' என்னும் பொதுப் பெயர்கள் பொதுவாக எல்லாராலும் வழங்கப்பட்டு வந்திருக் கின்றன. இத்தகைய கடவுள் பிறப்பில்லாதது, இறப்பில்லாதது, எல்லாமறிவது, எங்குமுள்ளது, எல்லாம் வல்லது, அளவி லாற்ற லுடையது, வரம்பிலின்பமுடையது, என்னும் இலக்கணங்கள் உடையதென்பது இத்தமிழ்நாட்டிலுள்ள வர்கள் எல்லாருக்கும் உடன்பாடாகும். இஃது எல்லா வற்றையும் படைத்து அழிக்கும் அப்பனாகவும், படைத்த வற்றைக் காக்கும் அம்மையாகவும் வணங்கப்பட்டு வருகின்றது. இத் தன்மைத்தாகிய கடவுளையே தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரும், மாணிக்கவாசகரும், திருமூலரும், அப்பர் சம்பந்தர் சுந்தரரும், மெய்கண்ட தேவரும் தாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/124&oldid=1585716" இலிருந்து மீள்விக்கப்பட்டது