உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

மறைமலையம் 19

இப்போது கோயிலுள் இறைவனுக்குச் செய்யும் நாள் வழிபாடுகள் பொருத்தமாய் இருந்தாலும், அவை வடமொழி மந்திரங்களைச் சொல்லிச் செய்யப்படுதலின், பொதுமக்கள் அவற்றின் உண்மை அறியாமல் விழிக்கின்றனர். தேவார திருவாசகங்களாற் பாடப்பெற்ற கோயில்களே பாராட்டப் படுகின்றன அல்லாமல், வடமொழி மந்திரங்களுக்காக எந்தக் கோயிலும் பாராட்டப் படவில்லை. ஆதலால், வழிபாடு முழுதும் தேவார திருவாசகத் தமிழ் மந்திரங்களைக் காண்டே நடைபெறுமாறு ஒவ்வொரு கோயிலிலும் ஏற்பாடு செய்தல் வேண்டும்.

பாது

இனி ஒவ்வொரு கோயிலின் சார்பாக நடத்தப்பட்டு வரும் திருவிழாக்கள் எப்போதும் போலவே எங்கும் நடைபெறும்படி செய்தல் வேண்டும். ஏனென்றால், நாடோறும் நெற்றித் தண்ணீர் நிலத்தில் விழப் பாடுபடும் ஏழை மக்களும், செல்வமிகுதியாற் கடவுளை மறந்து சிற்றின்பத்திற் கிடந்துழலும் செல்வர்களும், இவ்விருவர் நிலையிலும் சிறிது சிறிது ஒட்டி நிற்கும் மற்றைப் பொ மக்களும் இத்திருவிழாக் காலங்களிலேதாம் தத்தம் முயற்சிகளினின்றும் ஓய்வுபெற்று நீராடி நல்ல ஆடை அணிகலன்கள் அணிந்து, தம் மனைவி மக்கள் சுற்றத் தாருடன் மன மகிழ்ந்து கடவுள் நினைவும் வணக்கமும் உடை ய ராய்ப் பல ஊர்க்காட்சிகளையும் பல மக்களின் தோற்றங்களையும் கண்டு இம்மை மறுமைப் பயன்களைப் பற்று இன்புறுகின்றனர். இத் திருவிழாக்களும் திருக்கோயில்களும் இல்லையானால் இந்நாடும் ஏனை அயல் நாடுகளைப்போல் ஓயாத சண்டைக்கு இடமான போர்க் களமாகவே இருக்கும். ஆதலால், திருவிழாக்களை இன்னும் செவ்வையான முறையில் நடைபெறச் செய்வதோடு, அத் திருவிழாக்களின் உண்மையும் பயனும் எல்லார்க்கும் எடுத்துச் சொல்லும்படி கல்வியிற்றேர்ந்த அறிஞர்களுக்குத் தக்க பாருளுதவி செய்து, அவர்கள் அத்திருவிழாக் காலங்களில் ஆங்காங்கு விரிவுரை செய்யும்படி ஏற்பாடு செய்தல் வேண்டும்.

கோயில்களிற் பொதுப் பெண்டிரைத் தொண்டு செய்ய அமைத்தலும், அவர்களைக் கோயிலுக்குப் பொட்டுக் கட்டுவதும் அடியோடு விலக்கப்படல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/127&oldid=1585719" இலிருந்து மீள்விக்கப்பட்டது