உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கோவை

95

கோயில்களிற் வழிபாடாற்றுங் குருக்கள்மார் தமிழ் மொழியிற் பயிற்சி யுடையராயும், சைவசித்தாந்தம் நன்குணர்ந்தவராயும் தேவார திருவாசகம் ஓதுபவாரயும் இருக்கும்படி ஏற்பாடு செய்தல் வேண்டும். சில கோயில்களிற் றவிரப் பெரும்பான்மையான மற்றைக் கோயில் களில் வழிபாடுசெய்யும் குருக்கள்மார்க்குத் தக்க வரும்படியும் தக்க சம்பளமும் இல்லை. ஆதலால், மிகுந்த வரும்படியுள்ள கோயில்களின் வருவாயிலிருந்து மற்றைக் கோயில்களின் ஏழைக் குருக்களுக்குத் தக்க சம்பளங்கள் கொடுப்பித்தல் வேண்டும்.

கோயில்களிலுள்ள

இறைவன் திருவுருவத்திற்கு எப்போதும் போலக் குருக்கள்மாரே வழிபாடு செய்ய வேண்டுமல்லாமல் வணங்கப் போகிறவர்களெல்லாம் அதனாருகிற் சென்று அதனைத் தொட்டுப் பூசித்தல் வேண்டுமென்பது நல்லமுறையன்று. ஏனென்றால், வணங்கச் செல்பவர்களுக்குக் கடவுள்பால் உள்ள அன்பும் அச்சமும் குறைந்துவிடும்; அவ்விடமுந் தூய்மை கெடும்; மக்களின் நெருக்கடியும் இடைஞ்சலைத் தரும். தாழ்ந்தவர் என்று காட்டும் வேறுபாடுகள் அடியோடு நீக்கப்படல் வேண்டும்.

சில கோயில்களில் வரும் ஏராளமான வரும்படியிற் கோயிலின் இன்றியமையாச் ச் செலவுகளுக்குப் பயன் படுத்தப்பட்டனபோக, மிச்சத்தைத் தேவார பாட சாலைக்கும், தனித்தமிழ்ப் பாடசாலைக்கும், சைவ சித்தாந்த சபைகட்கும், தமிழ் சைவசித்தாந்த முணர்ந்த ஆசிரியர்க்கும், தமிழ் நூல் எழுதுவார்க்கும், சைவ சித்தாந்த விரிவுரையாளர்க்கும், கோயிலைச் சார்ந்த சத்திரஞ் சாவடிகட்கும் பயன்படுத்தல் வேண்டும்.

கோயிலின் வரும்படியைக்கொண்டு பார்ப்பனர்களுக்கு மட்டும் உணவு கொடுத்தலும், ஆரியவேத பாடசாலை அமைத்தலும், ஆங்கிலப் பள்ளிக்கூடங்கட்குப் பொருளுதவி செய்தலும் அடியோடு நீக்கப்படல் வேண்டும்.

தமிழ் மொழிச் சீர்திருத்தம்

இத் தென்றமிழ் நாட்டிலுள்ள நம்மனோர்க்கு உயிர் போற் சிறந்ததாகிய தமிழ் மொழியானது பல்லாயிர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/128&oldid=1585720" இலிருந்து மீள்விக்கப்பட்டது