உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ

96

L

மறைமலையம் 19

ஒழுக்கங்களையும்

ஆண்டுகளாக உயிரோடு உலவி வரும் சிறப்புடையது. ரியம் முதலான பிற மொழிகளைப்போல் இறவாதது. ஆரியத்திலுள்ள கட்டுக்கதைகளைப் போல்வன சிறிதும் இல்லாதது. இயற்கைப்பொருள்களையும் மக்களின் அன்பு அருள் கடவுளையும் அடியார் வரலாறுகளையும் பாடின உண்மை நூல்களே நிரம்பி உள்ளது. சாதி வேற்றுமையினையும், ஒருசாதியை உயர்த்தி னைப் பல சாதிகளைத் தாழ்த்தி முறையில்லாத விதிகளை வகுத்த ஆரிய நூல்களைப் போன்ற முறையற்ற நூல்கள் சிறிதும் இல்லாதது. கடவுளின் அருளைப் பெறுதற்கும், வாழ்க்கையின் நலங்களை அடைதற்கும், எல்லா மக்களும் ஒத்த உரிமை உடையரென வற்புறுத்தும் 'திருக்குறள்', 'பெரியபுராணம்' போன்ற உயர்ந்த ஒழுக்க நூல்களையே உடை யது. ஆரியத்திலுள்ள கட்டுக்கதைகள் மலிந்த புராண நூல்கள் சிறிதும் இல்லாமற் கடவுள் நிலையினையும் உயிர்கள் நிலையினையும் நுணுக்கமாக ஆராயும்'சிவஞான போதம்' போன்ற உயர்ந்த அறிவு நூல்களையே உடையது. இத்துணைச் சிறந்ததாகிய இத்தமிழ் மொழி எத்தகைய நுண்ணிய ஆழ்ந்த கருத்துக்களையும் தெரிவித்தற்கு இயைந்த சால்வளமுடைய தாகலின், ஆரியம் ஆங்கிலம் முதலான பிறமொழிச் சொற்களை இதன்கட் புகுத்தாமல் இதனையும் இதன் நூல்களையும் எல்லார்க்கும் தனிமையிற் கற்பித்தல் இன்றியமையாததாகும்.

தமிழ்நாட்டிற் செல்வர்களாயிருப்பவர்களும் பிறருந் தமிழ்மொழிப் பயிற்சிக்கும் தமிழ்க்கல்லூரிகள் அமைப்ப தற்கும் பொருளுதவி செய்யவேண்டுமே யல்லாமல் இவற்றை விடுத்து ஆரியம் ஆங்கிலம் முதலான மொழிப் பயிற்சிக்கும் அதற்குரிய கல்லூரிகட்குமே பொருளுதவிசெய்தல் நன்றாகாது. இத்தமிழ்நாட்டு மக்களெல்லாரும் தமக்குரிய தாய்மொழியிலேயே எளிதாகக் கல்வி கற்பிக்கப்படல்

வேண்டும்.

பா

ஆங்கிலம் முதலிய அயல்மொழிகளிலுள்ள இயற்கைப் ருள் நூல்களையும் உயிர் நூல்களையும் க கடவுள் நூல்களையும் தமிழில் மிகுதியாக மொழி பெயர்த்து அவற்றைப் பயிலும்படி செய்தல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/129&oldid=1585721" இலிருந்து மீள்விக்கப்பட்டது