உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

1. பொதுநிலைக் கழகம்

தமிழ்நாட்டிலுள்ள தமிழ்மக்கள் தமக்கே உரிய பண்டைப் பேராசிரியரின் அருளுரைகளின் வழிநில்லாது, பிற்காலத்தில் இடையே புகுந்த புராணகதைகளின் வயப் பட்டுப், பல்வகைச் சாதிப் பிரிவுகளும், பல்வகைச் சமயப் பிரிவுகளும், பல்வேறு வழக்க வொழுக்கங்களும் உடையராய் ஒருவரோடொருவர் பெரிதும் மாறுகொண்டு, அன்பு அருள் ஒழுக்கங்களை முற்றும் மறந்து, கல்வியும் ஆராய்ச்சியு மில்லாதவர்களாய் மிகச் சீர்குலைந்து நிற்பாராயினர். தெய்வத் தொல்லாசிரியர்களாகிய தொல்காப்பியர், திருவள்ளுவர், நக்கீரர், மாணிக்கவாசகர், திருமூலர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், பட்டினத் தடிகள், மெய்கண்டதேவர் முதலாயினாரும், அவர்க்குப் பின் அப்பழைய மரபு பிழையாது தாயுமான அடிகளும், அவர்க்குப் பின் இக்காலத்தில் இராமலிங்க அடிகளுந் தோன்றி, எல்லா உலகத்துக்கும் எல்லா உயிர்க்கும் ம் முழுமுதற் கடவுள் தலைவராயிருந்து, அவற்றை அசைத்தும் அறிவித்தும் வரும் அருட்பெருஞ் செயலையும், அத்தலைவ ராகிய தந்தைக்கு எல்லா உயிர்களும் அருமைப் பிள்ளை களாயிருக்கும் உண்மையையும் நெஞ்சங்கரைக்குஞ் செஞ் சொற் பாடல்களாற் பலகாலும் எடுத்து அறிவுறுத்தி, இடையிலே கலைந்து போன அன்பொழுக்க அருளொழுக் கங்களை மீண்டும் ஒன்று சேர்த்து நிலைபெறுத்துவா ராயினர். “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்னும் நம் தவ ஆசிரியர் திருமூலரின் மெய்யுரையினைக் கைக்கொண்டு, ரே முழுமுதற் கடவுளை, அன்பினால் அகங்கரைந்து உருகி வணங்கும் வணக்கமும், அதனால் உயிர்களெல்லாம் அவன் அருமை மக்களே ஆவர் என்னும் உணர்ச்சியுங் கிளர்ந்து

ரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/140&oldid=1585732" இலிருந்து மீள்விக்கப்பட்டது