உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

  • உரைமணிக்கோவை

விளங்கினாலன்றி அன்பும் அருளும் இந்நிலவுலகில் நிலை பெறமாட்டா அன்றோ? இதுபற்றியே இராமலிங்க அடிகளார் 'சமரச சன்மார்க்க சங்கம்’ அல்லது ‘பொது நிலைக் கழகம்' என்பதனை வகுத்து எல்லாத் தேயத்தார்க்கும் எல்லாச் சாதியார்க்கும் எல்லாச் சமயத்தார்க்கும் பொதுவாய் நின்று அருள்வெளியிலே ஆடல் புரியும் அம்பலவாணனாகிய ஒரு தனித்தலைமைக் கடவுளின் வழிபாட்டை வலியுறுத்தி, அவ்வாற்றாற் சாதிப் பிரிவு சமயப் பிரிவு சாதிச்செருக்கு சமயச் செருக்கு முதலிய பொல்லாங்குகளை அறவே ஒழித்து, மேலே காட்டிய தெய்வத் தொல்லசிரியரின் அருளொழுக்க முறைகளை எல்லா மக்களிடையும் பரவச் செய்தற்கு அரிய பெரிய ஏற்பாடுகளெல்லாஞ் செய்து வைத்து மறைந்தனர்.

ஆனால், அவர்கள் செய்து வைத்த அருமருந்தன்ன ஏற்பாடுகளுங்கூட, நாளடைவில் அறிவு அன்பு அருள் இல்லா நம் மக்களாற் பின்னும் நிலைகுலைக்கப்பட்டுச் சாதி வேற்றுமை சமய வேற்றுமைகளுக்கும், அவற்றால் வரும் போராட்டங்களுக்கும்இ டனாக மாற்றப்பட்டு வருவதை வடலூர் செல்லும்அறிஞர் கண்டு வருந்தா நிற்கின்றனர். இங்ஙனமாக நம் தெய்வ ஆசிரியர்கள் நம் மக்கள் முன் னேற்றத்தின் பொருட்டுக் கரைகடந்த பேரருளாற் காலங்க ே ஈறும் புதுக்கிவரும் பழைய தெய்வக்கோட்பாடுகள் இனியாயினும் சிதைவுறாமல் உரம்பெற்று நின்று நம்ம னோரை முன்னேற்ற வேண்டும் என்னும் இரக்க எண்ணங் கொண்டே ஆசிரியர் மறைமலையடிகள் இந்நாகரிக காலத்திற்கேற்ற நாகரிக முறையில் அத்தெய்வ

ஆசிரியர் கோட்பாடுகளைப் பின்னும் புதுக்கி க்கழக வாயிலாக எங்கும் பரப்பி வருகின்றார்கள்.

கடவுள் உணர்ச்சியின் இன்றியமையாமை

可 எறும்பு முதல் மக்கள் தேவர் ஈறான எல்லா உயிர் களின் நெஞ்சத் தாமரையினுள் விளங்கா நின்ற அருள் வெளியிலும், ஞாயிறு திங்கள் முதலான எண்ணிறந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/141&oldid=1585733" இலிருந்து மீள்விக்கப்பட்டது