உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை :

109

உலகங்களையெல்லாந் தன்னகத்து அடக்கி விளங்கும் நுண்ணிய அறிவு வெளியாகிய சிற்றம்பலத்திலும் நின்று எல்லாம் வல்ல இறைவன் இடையறாது தான் ஆடி எல்லாவற்றையும் ஆட்டுவிக்கின்றான். இவ்வாட்டம் எதன் பொருட்டு நடைபெறுகின்றதெனின், சிற்றுயிர்களாகிய நம் அறிவைக் கவிந்திருக்கும் ஆணவ வல்லிருளை நீக்கி, அம் முகத்தால் நமக்குப் பேரறிவையும் பேரின்பத்தையும் வழங்குதற் பொருட்ே பாருட்டே அது நடைபெறா நிற்கின்றது. ங்ஙனம் நாம் கேளாதிருக்கையிலேயும் எவராலும் படைக்க இயலாத மிக வியப்பான இவ்வுடம்புகளையும், நாம் இவ்வுடம்புகளோடு இணைந்திருந்து உலவிப் பலவகையான ன்பங்களை நுகருதற்கு இவ்வுலகத்தையும், இதிற் பலபல பண்டங்களையும் நாம் பிறவி எடுப்பதற்கு முன்னமே அமைத்துவைத்து, இப்பிறவியிலேயும்இனி வரும் பிறவி களிலேயும் நம்முயிர்க்கு ஓர் ஒப்பற்ற துணைவனாயிருந்து நம்மை ஒவ்வொரு நொடியும் ஓவாது பாதுகாத்துவரும் ஓயாத அருளியக்கத்தையே அம்பலவாணன் தன் இன்பக் கூத்தானது அறிவுறுத்துகின்றது.

தன் உண்மை இன்னும் விரிவாக எமது தலைமைப் பேருரையின்கட் காணப்படும். இங்ஙனம் எல்லாம் வல்ல இறைவன்றன் அருளியக்கத்தை எல்லாரும் எளிதில் அறிந்து காள்ளும்படி தெரிவிக்கும் அம்பலவாணன் திருவுருவ வழிபாட்டை விடச் சிறந்ததும், சிற்றுயிர்களாகிய நமக்கு இம்மை மறுமைக்குரிய எல்லா நலங்களையும் எளிதிற் பயப்பதும் வேறு ஏதுமே இல்லை. இறைவனை அருளியக்க நிலையில் வைத்து வழிபடும் இஃது எந்தச் சமயத்தார்க்கேனும் எந்தச் சாதியார்க்கேனும் எந்தத் தேயத்தார்க்கேனும் தனி உரிமையாக நிற்பதன்று. உண்மையறிவும் உண்மையன் முடையாரெவராயினும், அவர்க்கெல்லாம் இவ்வழிபாடு மெய்யுரிமையுடையதாகும். ஆதலினாற்றான், முனிவர் களுந் தேவர்களுஞ் சித்தர்களும் ஞானிகளும் யோகிகளும் சமயாசிரியர்களும் அரசர்களுங் கற்வர்களும் மற்றவர்களு மெல்லாம் முழுமுதற் கடவுளை இந்த நிலையில் வைத்தே வழிபட்டுத் தாம் தாம் விரும்பிய இம்மை மறுமை நலங் களைப் பெற்று வந்திருக்கின்றார்கள். இவ்வரும்பேருண்மை,

பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/142&oldid=1585734" இலிருந்து மீள்விக்கப்பட்டது