உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

66

மறைமலையம் 19

விண்ணவர் இந்திரன் பிரமன் நாரதாதி

விளங்குசத்த ரிஷிகள்கன வீணை வல்லோர்

எண்ணரிய சித்தர்மனு வாதி வேந்தர்

இருக்காதி மறைமுனிவ ரெல்லாம் இந்தக் கண்ணகன் ஞாலம் மதிக்கத் தானேஉள்ளங்

கையில் நெல்லிக் கனிபோலக் காட்சியாகத் திண்ணிய நல்லறிவால் இச்சமயத் தன்றோ

செப்பரிய சித்திமுத்தி சேர்ந்தா ரென்றும்”

என்று தாயுமான அடிகள் அருளிச் செய்தனர். இன்னும், இவ்வருள் வடிவத்தினைப் பண்டை நாளிலிருந்த எல்லாச் சமயத்தாரும் ஏதொரு வேறுபாடுமின்றி வந்து வழிபட்டு வந்தனர் என்பது பின்னுமவர்,

“சன்மார்க்க ஞானமதின் பொருளும் வீறு

சமயசங்கே தப்பொருளுந் தானொன் றாகப் பன்மார்க்க நெறியினிலுங் கண்ட தில்லை

பகர்வரிய தில்லைமன்றுட் பார்த்த போதுஅங்கு என்மார்க்க மிருக்குது எல்லாம் வெளியேயென்ன எச்சமயத் தவர்களும்வந்து இறைஞ்சா நிற்பர்"

என்று அருளிச்செய்தவாற்றால் இனிது விளங்கா நிற்கும்.

பண்டங்

அஃதுண்மையேயாயினும், கடவுளானவர் நாம் நமது முயற்சியாற் சீர்திருத்தி மேலேறுதற்கு வேண்டும் இவ்வுடம்பு முதலிய கருவிகளையும் இவ்வுலகத்துப் பல களையும் அமைத்துக் கொடுத்திருத்தலால், அவற்றைக் காண்டு நாம் நமது முயற்சியைப் பெருகச் செய்து மேலேறுதலே வேண்டற்பாலது; அதனை விடுத்து எந் நேரமுங் கடவுளே கடவுளேயென்று பேசுவதும் எழுதுவதும் அதனை வழிபடுவதும் ஆகிய செயல்களெல்லாம் பயனில் முயற்சிகளேயாகு மாதலால், அவை விடற்பாலவெனின், நன்று சொன்னாய்; நாம் ஒரு நன்முயற்சியினைச் செய்து மேலேறுதற்கு, அறிவும் ஆற்றலும் வேண்டுமன்றோ? அறிவும் ஆற்றலும் இல்லாதவற்கு எத்தகைய சிறு முயற்சியுங் கைகூடாது. இனி, நாமோ முன்நாட்களில் முன்னேரங்களில்

ம்

ரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/143&oldid=1585735" இலிருந்து மீள்விக்கப்பட்டது