உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைமணிக்கோவை

111

நடந்தவைகளை மறந்துபோகின்றோம்; இப்போது நம்மைச் சூழ நடப்பவைகளையும் கண் வைகளையும் கண்ணெதிரே கண்ட ாலன்றி அவற்றின் உண்மையை அறியமாட்டாதவர்களா யிருக்கின் றோம்; இங்ஙனமே அடுத்துவரும் நேரங்களிலும் அடுத்து வரும் நாட்களிலும் நடக்கப் போவனவற்றை அறிய மாட்டாதவர்களா யிருக்கின்றோம்.

வு

இவ்வளவு சிறுகிய அறிவுடையரா யிருத்தலொடு, பசி காமம் சினம் துயரம் கலக்கம் பகை முதலிய இழிகுணங்கள் தோன்றுங் காலங்களிற் சிறிதாயிருக்கும் இச்சிற்றறிவும் மங்கி மறைந்து போகின்றது. அதுவேயுமன்றிப், பசியெடுத்த காலங்களில் உணவு கிடையாவிட்டாலும், நாவறண்ட நேரங்களில் நீர் அருந்தாவிட்டாலும் எத்துணை வலிமை யுடையவர்களும் இளைத்துக் களைத்துக் கண் பஞ்சடைந்து காது செவிடாகி முயற்சி அவிந்து அடங்கிப் போதலை நாம் பார்த்து வருகின்றோம். இத்தனைக் குறைந்த வலிமை யுடை ய நாம் எந்த முயற்சியைத்தான் எடுத்து நிறைவேற்ற மாட்டுவோம்? இங்ஙனம் நாம் சிற்றறிவுஞ் சிறுகிய ஆற்றலும் உடையேமாய் இருத்தலினாலன்றோ, நாம் எடுக்கும் எத்தகைய சிறு முயற்சிக்கும் பிறருதவியை நாடவேண்டிய வர்களாயிருக்கின்றோம். மனைவிகணவனுதவியையும்,

கணவன் மனைவியுதவியையும், மக்கள் பெற்றோருதவி யையும், குடிகள் அரசனுதவியையும், அறிவிலார் அறிவுடை யாருதவியையும், மாணாக்கன் ஆசிரியனுதவியையும், தாழிலாளி தலைவனுதவியையும், ன்றியமையாது வேண்டி நிற்க, உலகியலொழுக்கம் நடைபெறுவதனை உற்று நோக்குங்கால் ஒருவன் தானாகவே ஒரு முயற்சியைத் தனி முடிக்கமாட்டுவா னென்பது பெரிதும் பிழைபடுவதொன்றாம்.

அற்றேல், மக்களாயினார் ஒருவர் ஒருவர்க்கு உதவியாய் நின்றே தாம் எண்ணிய முயற்சிகளை இனிது முடிக்கக் காண்ட லின், இதுவே அமையும்; இதனின் வேறாகக் கடவுளை வணங்குதலும் வழிபடுதலும் எற்றுக்கு? என்றால் மக்கள் வ்வொருவருஞ் சிற்றறிவுஞ் சிறுகிய ஆற்றலும் உடையராயிருத்தலால், இவர் தாமே ஒருவர்க்கொருவர் உதவியாய் நின்று, தாம் எண்ணிய முயற்சியை முடித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/144&oldid=1585736" இலிருந்து மீள்விக்கப்பட்டது