உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

مے

122

மறைமலையம் 19

களைக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறிந்து சிலகாலிருந்து சில காலில் மறைந்துபோகும் உயிர்களாகிய நம்மியல்பையும், நம்மிற் பொதிந்திருக்கின்ற மும்மலங்களி னியல்பையும், இம் மலங்களினின்றும் விடுபட்டு நாமடை தற்குரிய பேரின்ப வீட்டினியல்பையும் நாம் நன்குணர்ந்து நம் அறிவை வளர்த்து இன்பத்தைப் பெறுதற்கும் இவ் வியல்புகளையெல்லாம் நமக்கு நன்கு அறிவுறுத்தும் அறிவுடையோர் நூல்களினுதவி நமக்கு ன்றியமையாது வேண்டப்படுவதாயிருக்கின்றது. நூல்களைக் கல்லாதவ ரறிவு எவ்வளவு சிறந்ததாகக் காணப்படினும், அவர் சொல் கேட்கற்பாலதன்று. அவரைக் காண்டலும் ஆகாது என்ப தனை ஆசிரியர் திருமூலர்,

“கல்லாத மூடரைக் காணவு மாகாது கல்லாத மூடர் சொற் கேட்கக் கடனன்று கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராங் கல்லாத மூடர் கருத்தறி யாரே

என்று கூறுமாற்றால் அறிந்து கொள்ளலாம். இங்ஙனமே, நம் சைவசமயாசிரியர்களில் திருஞானசம்பந்தப் பெருமான்.

“கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன்’

எனவுந், திருநாவுக்கரசு நாயனார்,

66

“கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்கை கற்றார்கள் உற்றோருங் காதலானை

எனவுங் கூறுதல் காண்க.

ஆதலினாற்றான், கடவுளை வணங்குந் திருக்கோயில் களிலெல்லாம் பலவகைக் கலை நூல்களையும் ஆராய்ந் துணரும் பட்டிமண்டபங்கள் பண்டைக் காலத்தில் வகுக்கப் பட்டிருந்தன. கல்வியறிவு பெரிதுங் குன்றிப் போன பின்றைக் காலத்திலோ அப் பட்டிமண்டபங்களெல்லாம் ஐயகோ ! பாழ்மண்டபங்களாய்க் கிடக்கின்றனவே! கடவுளை வழிபடு மிடத்தில் நூலாராய்ச்சியும், நூலாராய்ச்சி செய்யுமிடத்திற் கடவுள் வழிபாடும் ஒன்றை விட்டொன் ான்று பிரியாமலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/155&oldid=1585747" இலிருந்து மீள்விக்கப்பட்டது