உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை ஃ

121

தன்றோ? ஆதலாற், காணவுங் கருதவும் படாத இறைவனை நாம் காணவுங் கருதவுந் தக்க நிலையில் வைத்து வழிபட்டு வந்தாலன்றி, அவனை அறிவதும் அவனை நினைப்பதும், ன அவன்பால் அன்புபூண்டு ஒழுகுவதும் நம்மனோர்க்குச் சிறிதும் யலா. ஆகவே, எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளை நம்போன்ற ஓர் அழகிய வடிவத்தில் வைத்து வழிபடுலே சிறந்த முறையாகும். என்றாலும், அங்ஙனம் நாம் கடவுளின் திரு அடையாளமாக அமைக்கும்வடிவம், அக் கடவுள் இலக்கணத்தை லக்கணத்தை உணர்த்துவதாய் அக்க வு ள் நிலைக்கு மாறுபடாததாய் இருக்கவேண்டும். கடவுளிலக் கணத்தை உணர்த்தாதனவுங் கடவுள் நிலைக்கு மாறா வனவும் ஆகிய வடிவங்களை வைத்து வழிபட்டால் அவ் வழிபாடு கடவுளைச் சார்ந்ததாகாது. ஆனதனாற்றான், பண்டைக்காலத்திருந்த நம் ஆசிரியர் முதற் பின்றைக் காலத்து வந்த இராமலிங்க அடிகள் ஈறாகிய எல்லாரும், முழுமுதற் கடவுள் எல்லா உயிர்களி னகத்தும் எல்லாப் பொருள்களி னகத்தும் அவற்றின் புறத்தும் நிறைந்திருந்து இடையறாது ஆடி, அவற்றை யெல்லாம் ஆட்டும் இன்பக் கூத்தை நாம் நினைவு கூர்தற்பொருட்டு, அவன் ஆடும் நிலையில் ஒரு திருவுருவத்தை அமைத்து அதனை வழிபட்டு வருவராயினர். அவ்வழிபாடு இறைவன் அடையாளத்திலே செய்யப்படினும், அஃது உயிர்களை மேலேற்றும் பொருட்டு இறைவன் இயற்றும் இன்ப அருட்கூத்தின் இயல்பைப் புலப்படுத்தி நம் அறிவையும் அன்பையும் அவன்பாற்பதிய வைத்தலின், அதுவே முழுமுதற் கடவுளை வழிபடுஞ் சிறந்த முறையாகும். அம்முறையைப் பின்பற்றியே எல்லாச் சாதி யாரும். எல்லாச் சமயத்தாரும் ஏதொரு வேற்றுமையுமின்றி வழிபட்டு உய்யும் பொருட்டு அம்பலவாணர் திருவுருவம் வைத்த கோயிலொன்று எம்மால் அமைக்கப்படலாயிற்று.

மணிமொழி நூல்நிலையம்

இனிக், கடவுள்நிலையை யுணர்ந்து அவன்றிருவளைப் பெறுதற்கும்; அவனாற் படைக்கப்பட்டிருக்கும் உலகத்தினி யல்பையும், இவ்வுலகத்தில் இருக்கும் பலவகைப் பொருள் களினியல்பையும், இவ்வுலகத்திருந்து வ்வுலகத்திருந்து இங்குள்ள பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/154&oldid=1585746" இலிருந்து மீள்விக்கப்பட்டது