உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

மறைமலையம் 19

பிறதுறைகள் பலவற்றிலும் யாம் இதுகாறும் எடுத்துப் பேசியிருக்கும் அரும்பெரும் பொருள்கள் அளவில்லாதன வாகும். யாம் ஆற்றிய விரிவுரைகளைக் கேட்டு அறிவு விளங்கப் பெற்றார். தொகையும் அளவிடப்படாததாகும், யாம் ஆற்றிய விரிவுரைகளைக் கேட்டு அறிவு விளங்கப் பெற்றார். தொகையும் அளவிடப்படாததாகும், யாம் சென்ற முப்பத்தெட்டு ஆண்டுகளாக நாள் வெளியீடுகள், கிழமை வெளியீடுகள், திங்கள் வெளியீடுகளில் வரைந்திருக்குங் கட்டுரைகளாலும், யாம் பெரிதாராய்ந்து இதுகாறும் வெளிப்படுத்தி யிருக்கும் முப்பத்திரண்டு அரியபெரிய நூல் களாலும் நல்லறிவு பெற்று நம் நாட்டவர் பலதுறைகளிலும் முன்னேற்றம் அடைந்து வருதல் எவரும் அறிந்ததேயாம்.

அம்பலவாணர் திருக்கோயில்

ப்

இனி, முழுமுதற் கடவுள் நிலையை மனத்தளவாய் வைத்து ஆராய்தலாலுஞ், சொல்லளவாய் வைத்து பேசுதலாலுமே மக்கள் அக்கடவுளின் பேரின்பப் பேற்றை அடைதல் இயலாது. இவ்வுடம்பையும் இவ்வுடம்பிலுள்ள கண் கால் கை முதலான உறுப்புகளையும் படைத்துக் கொடுத்த முதல்வனுக்கு, அவ்வுடம்பையும் அவ்வுறுப்பு களையும் பயன்படுத்தி, நெஞ்சம் நெக்கு நெக்குருகுதலால் மட்டுமே அவன் திருவருட்பேற்றிற்கு உரியராகலாம்.

அற்றேற், காணவுங் கருதவும்படாத இறைவனுக்கு நம்முடம்பைப் பயன்படுத்துதல் யாங்ஙனங் கூடுமெனின், சிற்றறிவுஞ் சிறுதொழிலு முடைய ய மக்களாகிய நம் மனோரின் மனம் ஓர் உருவத்தையே பற்றி நிற்குமல்லது அருவத்தைப் பற்றி நிற்கவல்லதன்று. வடிவம் இல்லாத வெறும் வெளியை எவராவது நினைவில் வைக்கக் கூடுமா? நம் நினைவுகள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்ப்போ மானால் ஒவ்வொரு நினைவும் ஒவ்வொரு வடிவத்தையே பற்றிக் கொண்டு நிற்கக் காணலாம். இவ்வாறு வடிவங் களைப்பற்றிய நம்முடைய நினைவின் தொகுதிகளே நமக்கு அறிவாயும் அறிவு வளர்ச்சியாயும் அமைகின்றன. ஏதொரு வடிவத்தையும் அறியவும் நினைக்கவும் மாட்டாத சிறிய கைக் குழந்தைக்கு அறிவு சிறிதுமில்லாமை எவரும் அறிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/153&oldid=1585745" இலிருந்து மீள்விக்கப்பட்டது