உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைமணிக்கோவை

சென்றகாலத்தில் யாம் ஆற்றிய தொண்டு

119

னி, யாம் பொதுநிலைக் கழகம் நிலைபெறுத்துதற்கு முன்னமே “சைவ சித்தாந்த மகா சமாரசமெனப் பெயரிய பெருங் கழகமொன்றனை 1905ஆம் ஆண்டு தோற்றுவித்து அதனை மிகவுந் திறம்பட நடாத்தி வந்தேம். என்றாலும், சைவ சித்தாந்தத்தின் மெய்ந் நிலையுணராத குறுகிய நோக்க முடைய சைவர்கள், சைவத்தின் சிறந்த உண்மைகளைப் புராணப் பொய்க் கதைகளொடு கலப்பித்துச் சாதி வேற்றுமை சமய வேற்றுமைகளை மிகுதிப்படுத்துதற்கு இடமாய் அவை தம்மைத் திரிபுபடுத்த முனைந்ததோடு எமது விரிந்த நோக்கத்துக்கு மாறாகச் சமாசத்தையும் வேறு படுத்தப் புகுந்தமையால், யாம் அதனொடு கொண்ட எமது தொடர்பை அறுத்து, எமது விரிந்த நோக்கத்திற்கு இசையப் 'பொதுநிலைக் கழகம்' என்பதனை நிறுவி, ஆசிரியர் மாணாக்கர் முறையில் வைத்துச் சைவ சித்தாந்தப் பொது நிலை (சமரச) உண்மைகளை எங்கும் பரவச் செய்தேம்.

இவ்இரண்டு கழகங்களுந் துவங்குதற்கு முன்னமே 1902ஆம் ஆண்டில் அறிவுக்கடல் (ஞானசாகரம்) எனப் பெயரிய செந்தமிழ் வெளியீட்டைத்துவங்கிச், சைவ சித் தாந்த மகா சமாசம் நிறுவிய காலையில் அதனைச் சமாச வெளியீடாகவும், அச்சமாசத் தொடர்புவிட்டுப் பொது நிலைக் கழகந் துவங்கிய காலையில் அதனைக் கழக வெளி யீடாகவும் நடத்தி வரலாயினேம். இவ் வெளிவீட்டின் வாயிலாகச் செந்தமிழ் நலங்கனிந்த அரிய பெரிய தமிழ் நூல்களும், உயர்ந்த சைவசித்தாந்த உண்மைகள் பொதிந்த அறிவுப் பெருநூல்களும் எம்மால் இதுகாறும் வெளிப் படுத்தப் பட்டிருக்கின்றன.

ஞானசாகரந் துவங்குதற்கு முன்னமே, எமது பதி னாறாமாண்டில் நாகபட்டினத்தில் முதன்முதல் நிலை பறுத்திய இந்து மதாபிமான சங்கத்தில் விரிவுரைகள் நிகழ்த்தத் தொடங்கியது முதல் இதுகாறும் இவ்விந்திய நாட்டிலும் இலங்கையிலும் யாம் நிகழ்த்திய விரிவுரைகள் ஆயிரக் கணக்காகும். சமயத் துறையிலுந் தமிழ்மொழித் துறையிலும் மக்கள் முன்னேற்றத்திற்கு இன்றியமையாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/152&oldid=1585744" இலிருந்து மீள்விக்கப்பட்டது