உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

மறைமலையம் 19

மேலும், உலகிற்கெல்லாம் ஒரு தானேயாய் விளங்கா நின்ற முழுமுதல்வனை நேரே காணும் பேறு வாய்ந்த மாணிக்கர், சம்பந்தர் முதலான அருட் குரவர்களெல்லாரும் இதன் தெய்வத்தன்மை உணர்ந்தன்றோ, இறைவனை வழுத்துதற்கும் வாழ்த்துதற்கும் இத்தமிழ் மொழியையே எடுத்து வழங்குவாராயினர்? இதுவேயுமன்றி, மற்றை மொழிகளெல்லாஞ் சினம் வருத்தந் துன்பம் வந்தாற் பிறக்கும் உரத்த ஓசைகளும் குறிப்போசைகளும் நிறைந் திருத்தல் போலாது, மகிழ்ச்சி மிகுந்த அமைதிக் காலத்திற் பிறக்கும் இனிய மெல்லோசைகளே செந்தமிழ்மொழியில் நிரம்பியிருத்தலால், அன்பினால் அகங்குழைந்துரு கி வளாவுவார் தம் இம்மையின்ப வாழ்க்கைக்கும், இறைவனை அன்பினாற் குழைந்து குழைந்துருகித் தொழுது பாடுவார் தம் மறுமையின்ப வாழ்க்கைக்குத் தமிழ்மொழி யொன்றுமே சைந்த தன் கருவியாகும்; இவ்வுண்மை கண்டன்றோ ஆசிரியர் இராமலிங்க வள்ளலார்,

66

அள

சல்ல லேசு

டம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெருமறைப்பையும் போதுபோக்கையும் உண்டுபண்ணுகின்ற ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை வொட்டாது, பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் உடையதாய்ப் பாடுதற்குந் துதித்தற்கும் மிகவும் இனிமை யுடையதாய்ச் சாகாக் கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி ஒன்றனிடத்தே மனம் பற்றச் செய்து, அத்தென் மொழிகளாற் பலவகைத் தோத்திரப் பாட்டுக்களைப் பாடுவித்தருளினீர்!”

என்று இறைவனை நோக்கி விண்ணப்பித்தருளினார். ஆகவே ப்பொதுநிலைக் கழகத்தின் மூன்றாம் பெரு நோக்கம் தனித்தமிழ்மொழிப் பயிற்சியையும், தனித்தமிழ் நூற் பயிற்சியையும் எங்கும் பரவச் செய்தலும் மாணாக் கர்க்குப் பயிற்றுதலுமாகும். இந்நோக்கத்தை யடுத்து இக்கால நாகரிக உணர்ச்சிக்கு உணர்ச்சிக்கு இன்றியமையாது வேண்டப்படும் ஆங்கில மொழி நூற் பயிற்சியையும் ஆரிய மொழி நூற் பயிற்சியையும் உடன் சேர்த்துப் பயிற்றுதலும் இக்கழக முயற்சிக்கு உரியதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/151&oldid=1585743" இலிருந்து மீள்விக்கப்பட்டது