உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏ

  • உரைமணிக்கோவை

117

மொழிப் பயிற்சியே முதற்பெருங் கருவியாக எடுக்கப்படும். னன்றால், மிகப் பழைய நாகரிக மொழிகளிற் பண்டைக் காலந்தொட்டு இன்றைக்காலம் வரையில் உயிரோடு உலவி மக்களுக்குப் பெரிதும் பயன்பட்டு வருவது தமிழ்மொழி ஒன்றுமேயாகும். பண்டை நாகரிக மொழிகளிற் சிறந்த ரியம், கிரேக்கம், இலத்தீன், ஈபுரு முதலான மொழிக ளெல்லாம் எத்தனையோ ஆயிர ஆண்டுகளுக்கு முன்னமே மக்களால் வழங்கப்படாமல் இறந்தொழியவுந், தமிழ்மொழி ஒன்று மட்டுமே அன்று தொட்டு இன்று வரையில் இளமை குன்றாது வளமையிற் றிகழ்வதை உணர்ந்து பார்க்குங்கால், இது தெய்வத் தன்மை வாய்ந்த மொழி என்பது நன்கு புல னாகின்றதன்றோ? தமிழுக்கு இதனினும் மிக்க சிறப்பு வேறு யாது வேண்டும்? மேலும், இறந்துபட்ட ஆரிய மொழிகளிற் பொய்யும் புளுகும் மலிந்த புராண கதைகளும்; கடவுளின் முழுமுதற்றன்மையைக் குறைத்துக், குறைபாடுடைய மக்கள் சிலரைக் கடவுள் நிலைக்கு உயர்த்தி, மக்கள் அவ்வாற்றால் முழுமுதற் கடவுளைச் சாராது பிறவிக்கடலிற் கிடந்து உழலச்செய்யும் பொருந்தாப் பொய்க்கதைகளும்; ஒரு பிறப்பினரான மக்களில் ஒரு சிறுபாலாரை உயர்த்தி மற்றைப் பெரும்பாலாரைத் தாழ்த்தி அப்பெரும்பாலார்க்குப் பெருந்தீங்கு பயக்குங் கொடிய முறைகளை வகுத்த மிருதி நூல்களும்; வாயற்ற ஏழை உயிர்களைக் கணக்கின்றிக் கொலைபுரிந்துந் கட்குடித்துஞ் சிறுதெய்வ வெறியாட் L டுப்பிக்கும் வேள்வி நூல்களும்; அச் சிறு தெய்வங் களுள் ஒன்றினொன்றை உயர்த்தி அவை தம்மை வணங்கு வார்க்குட் பெருங்கலகத்தை மூட்டுஞ் சமய வேற்றுமைப் புராணங்களும் நிறைந்திருத்தல் போலாது,இயற்கைத் தோற்ற அழகுகளையும், மக்களின் அன்பொழுக்க அரு ளொழுக்க விழுப்பங்களையும், உலகியல் நுட்பங்களையும், ஒரு ரு தெய்வ வழிபாட்டில் உள்ளத்தை ஈடுபடுத்தி உருக்குந் தெள்ளமிழ்தப் பாக்களையும், கடவுள் நிலை உயிர்நிலை உயிரைப் பொதிந்த மலநிலை என்னுமிவற்றை ஆழ்ந்து ஆழ்ந்து அறிவு நுணுகி ஆராயும் ஆராய்ச்சிப் பெரு நூல்களையும் உடைய தமிழ்மொழி தெய்வத் தன்மை யுடையதென்பதிற் சிறிதும் ஐயமில்லையன்றோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/150&oldid=1585742" இலிருந்து மீள்விக்கப்பட்டது