உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

மறைமலையம் 19

என்று இராமலிங்க அடிகளும் மெய்யறிவு கூறியிருத்தல் நினைவிற் பதிக்கற்பாலதாகும். இவ்வாறு சிற்றுயிர்கள் பாற் கொலை புலைதவிர்ந்த இரக்கவொழுக்கமும், நம் போன்ற மக்கள்பாற் சாதி வேற்றுமை சமய வேற்றுமை தவிர்த்த அன்பொழுக்கமும் உடையாரே, உண்மை அருள் உடைய ராய், இறைவனருளை முற்றும் பெறுதற்குரியராதலின், அவரெல்லாஞ் சமரச சன்மார்க்க சங்கத்தராவரென்றும், அவர் மட்டுமே ஓர் உயர்குலத்தவராவரென்றும் நன்கு விளக்கி,

66

‘அருளுடையா ரெல்லாருஞ் சமரச சன்மார்க்கம்

அடைந்தவரே யாதலினால் அவருடனே கூடித் தெருளுடைய அருள்நெறியிற் களித்து விளையாடிச் செழித்திடுக வாழ்கஎனச் செப்பிய சற்குருவே”

என்றும்,

“கொலைபுரிவார் தவிரமற்றை யெல்லாரும் நினது

குலத்தாரே நீ யெனது குலத்துமுதல் மகனே

மலைவறவே சுத்தசிவ சமரசசன் மார்க்கம்

என்றும்,

66

வளரவளர்ந் திருக்கவென வாழ்த்தியவென் குருவே"

சாதிகுலம் சமயமெலாந் தவிர்த்தெனைமே லேற்றித்

தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே'

وو

என்றும் இராமலிங்க அடிகளார் அருளிச் செய்திருத்தல் காண்க. ஆதலால், இப்பொதுநிலைக் கழகத்தின் இரண்டாம் பெருநோக்கம் கொலை, புலை, சாதி வேற்றுமை சமய வேற்றுமை தவிர்ந்த அன்பொழுக்கத்தை யாண்டும் பரப்பு தலும், அங்ஙனம் பரப்புதற்கு உதவியாகத் தகுதிவாய்ந்த மாணவரைப் பழக்கி அவரை அந்நிலையில் நிறுத்துதலு மாகும்.

தமிழ்ப் பயிற்சியின் முதன்மை

னி, மேலே காட்டிய பொதுநிலைக் கழகக் கோட் பாடுகளை எளிதிலே எங்கும் பரவச் செய்தற்குத் தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/149&oldid=1585741" இலிருந்து மீள்விக்கப்பட்டது