உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைமணிக்கோவை :

115

லென்பது உயிர்களைக் கொல்லாமையும், அவற்றின் ஊனை உண்ணாமையும் ஆகும். உயிர்களைக் கொல்வோரும் அவற்றின் ஊ ன உண்போரும் கொடிய வன்னெஞ்ச முடைய ராதலால் அவர்க்கு அன்பும் அருளும் உண்டாகா.

“தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்’

என்று தெய்வத் திருவள்ளுவர் கூறுதலும்,

66

(குறள் 251)

'உயிர்க்கொலையும் புலைப்புசிப்பு முடையவர்க ளெல்லாம் உறவினத்தா ரல்லர் அவர் பிறவினத்தார்”

என்று இராமலிங்க அடிகள் அருளிச் செய்தலும் காண்க. அங்ஙனமே நம்போன்ற மக்களிடத்துச் சாதி வேற்றுமை சமய வேற்றுமை பாராட்டி, அவர்பால் அருவருப்புக் கொள் வார்க்கு அன்பு அருள்கள் உண்டாதல் சிறிது மில்லை யாதலால், அவரும் பொதுநிலைக் கழகமாகிய சமரச சன் மார்க்கத்துக்குப் புறம்பாகுவர்.

66

'சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதமிலி”

என்றும்,

66

என்றும்

சமய வாதிகள் தத்த மதங்களில் அமைவ தாக அரற்றி மலைந்தனர்”

“புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயந்

தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுநிற்க”

என்றும் மாணிக்கவாசகப் பெருமானும், அவரை யொப்பவே,

"சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே

சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே

ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணேநீர் அலைதல் அழகலவே”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/148&oldid=1585740" இலிருந்து மீள்விக்கப்பட்டது