உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

மறைமலையம் 19

செய்வனவெல்லாம் பழுதாய்ப் போகும். ஆதலால், கடவுளின் திருவுளக் கருத்தையும் சிற்றுயிர்களாகிய நம் முடைய நிலையையும் ஆராய்ந்து இப்பிறவியைப் புனித மாக்கிக்கொண்டு, இதிற் செம்மையாக நீண்ட வாழ்க்கை செலுத்துவதொடு மறுமை வாழ்க்கைக்கு வேண்டுந் தவ முயற்சிகளையுந் தவ இயல்களையும் விடாப்பிடியாய்க் கைக்கொண்டு நாம் ஒழுகல் வேண்டும். இவ் வுயர்ந்த உண்மைகளைத் தகுதிவாய்ந்தாரெல்லார்க்கும் அறிவிக்கும் முதற்பெருநோக்கங் கொண்டே எம்மால் இப்பொதுநிலைக் கழகம் நிலை பெறுத்தப்படுவதாயிற்று.

அன்பு அருள் ஒழுக்கம்

எல்லாம் வல்ல இறைவன் அறிவும் அன்பும் அருளுமே உருவாய்க் கொண்டு விளங்குகின்றானென்பது, அவன் அமைத்த அமைப்புகளில் நன்கு புலனாதலால், மக்களாகிய நாமும் அவனைப் போற் பேரறிவும் பேரன்பும் பேரருளும்

அடை

டையராகி, அவனது பேரின்ப நிலையை அடையும் வரையில் நமக்குப் பல பிறவிகள் வருமென்பது திண்ண மாய்த் தெரிகின்றது. அப்பிறவிகளைக் குறைத்து இறைவ னுடைய பேரின்ப நிலையை நாம் விரைவிற் பெறல்வேண்டு மானால், நாம் நம் அறிவையும் அன்பையும் அருளையும் அளவின்றிப் பெருகச் செய்தல்வேண்டும். எல்லையில்லாத அன்புடைய றைவனை இடை விட ாது நம் நினைவில் வைத்தால் மட்டுமே, நாமும் நமது நலனை மறந்து எல்லா உயிர்களிடத்தும் எல்லையில்லாத அன்பும் அருளும் உடையராக நடத்தல்கூடும். இவ்வாற்றாற் கடவுளிடத்துப் பேரன்புபூண்டு ஒழுகுவதும், எல்லா உயிர்களிடத்தும் அன்பினால் அகங்கரைத்து ஒழுகுவதும் ஒன்றைவிட் டொன்று பிரியாத அத்துணை ஒருமைப்பாடுடையவாகும். மக்களினுந் தாழ்ந்த சிற்றுயிர்களிடத்து இரக்கம்பூண்டு ஒழுகுதலாலும், நம் போன்ற மக்களிடத்து த்து ஏதொரு வேற்றுமையுங் காணாது அவர்பால் அன்பும் அருளும் வைத்து, அவர்க்கு ஆவன செய்து, அவரை அறிவிலும் அன்பிலும் மேலேற்றுதலாலுமே நமக்கு அன்புமருளும் அளவுபடாது பெருகும். உயிர்களிடத்து இரக்கம் காட்டுத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/147&oldid=1585739" இலிருந்து மீள்விக்கப்பட்டது