உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை :

113

வரலாறுகளும், ஏனைச் சமயக் குரவர்கள் வரலாறுகளும், எஞ்ஞான்றும் அரும் பெரு முயற்சிகளை முடிக்கும் ஏனை அறிஞரின் வரலாறுகளும் யாங் கூறும் உண்மையினை நிலை நிறுத்துதற்குப் போதிய சான்றுகளாம். ஆகவே எத்தகைய முயற்சியைச் செய்தாலும் முழுமுதற் கடவுள் உணர்ச்சி யோடு அதனைச் செய்தலே, அதனை நிறைவேற்றிப் புகழ் புண்ணியங்களைப் பெறுதற்கு ஏதுவாம் என்று தெளிக.

இனி, மக்கள் முதலிய சிற்றுயிர்களுக்குப் பிறவி வருவதன் நோக்கம் இன்னதென்றாராய்ந்து அதற்கேற்ப நம்முடைய முயற்சிகளைச் செய்தால் மட்டும் நாம் சிறந்த பயனை அடையலாம். பிறவி எடுக்கும் உயிர்கள் தம்முடைய முயற்சியினாலேயே இப்பிறவிகளை அமைத்துக் கொள் கின்றார்கள் என்று எவருமே சொல்லத் துணியார். தம் முடைய முயற்சியினாலேயே இப்பிறவிகளை அமைத்துக் கொள்ளும் ஆற்றல் மக்கட்கிருந்தால் தமது விருப்பத்துக்கு மாறாகத் தாம் ஏன் இறந்து போகின்றார்கள்? இறந்து போவதில் எவர்க்கும் விருப்பம் இல்லாமையோடு இப் பிறவியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்னும் பேரவாவும் பெரு முயற்சியும் எல்லாரிடத்துங் காணப் படுகின்றனவல்லவோ? அப்படியிருந்தும், எல்லாரும் ஏன் இறந்து போகின்றனர்? மக்கள் எண்ணத்துக்கு மாறாக நிகழும் இந்நிகழ்ச்சியை உற்று நோக்குங்காற், பிறவியை வருவிப்பதும், அதனினின்றும் உயிர்களை விடுவிப்பதும் ஆகிய அரும் பெருஞ்செயல்கள் இச்சிற்றுயிர்களின் அறிவாற்றலுக்கு அடங்காமல், அவற்றைக் கடந்து நிற்கும் கடந்து நிற்கும் முழுமுதற் கடவுளின் பேரறிவு பேராற்றல்களின்வழி நடைபெறு கின்றன வென்பது நன்கு புலப்படவில்லையா? ஆகவே, பிறவிகளைத் தரும் முதல்வன் அப்பிறவிகளை உயிர்களுக்கு நிலையாக வையாமல், அடுத்தடுத்து அவற்றை மாற்றிக் கொண்டு செல்வதன் நோக்கம்; இப்பிறவியே பெரும் பயன் அளிப்பதன்று; இனி அடையப் போகும் பெரும் பயனுக்கு இப்பிறவி ஒரு பெருங்கருவியேயாம் என்பதன்றோ? ஆகவே, இனி அடையப்போகும் பெரும் பயனுக்கு ஏற்றபடி, இப் பிறவியின் முயற்சிகளை ஒழுங்கு செய்தல் வேண்டுமே யல்லாமல், இதனையே நிலையாக நினைத்துச் நி

னி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/146&oldid=1585738" இலிருந்து மீள்விக்கப்பட்டது