உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

2. மக்கள் கடமை

தமிழ் நாட்டுத் தாய்மார்களே! உங்களுடை நன்மையையும் முன்னேற்றத்தையும் நாடி, உங்களுக்கு முதன்மையாக வேண்டும் சில சிறந்தபொருள்களை உங்களுக்கு விளக்கிச் சொல்ல விரும்புகின்றேம். நமது தமிழ் நாட்டைத் தவிர, மற்ற நாடுகளில் இருக்கும் பெண்மணிகள் கல்வியிலுங் கடவுள் வணக்கத்திலும் நாகரிக ஒழுக்கத் திலும் நாளுக்குநாள் பிறைபோல் வளர்ந்து மிகவும் இனி னி தாக உயிர்வாழ்கின்றார்கள். நமது தமிழ் நாட்டு மாதர்களோ சிறந்த கல்வியுடையவர்களும் அல்லர், உண்மையான

கட

வுளை ள வணங்கத் தெரிந்தவர்களும் அல்லர். வேறு எவ்வகையான நாகரித்தில் உயர்ந்தவர்களும் அல்லர், உண்ண உணவும், உடுக்கத் துணியும், இருக்க இடமுங் கிடைத்தாற் போதும் என்றும் இவைகளுக்கு வறுமைப் படாமல் வாழ்வதே இன்ப வாழ்க்கை என்றும் நினைத்து, உணவு உடை இருப்பிடம் என்னும் இவைகளைத் தேடிக் கொள்வதிலும், தேடிய இவற்றை உண்டு உடுத்து உறை விடமாக்கி உறங்கிக் கழிப்பதிலுந் தம் வாழ்நாளைக் கடத்தி வருகின்றார்கள். உயர்ந்த அறிவாவது உயர்ந்த நோக்கமாவது நம் பெண்மக்களுக்குச் சிறிதும் இல்லை; அல்லது உயர்ந்த அறிவையும் உயர்ந்த நோக்கத்தையும் பெற வேண்டு மென்னும் எண்ணமாவது இவர்களுக்கு இருக்கின்றதோ வென்றால், அது தானும் ல்லை. உண்டு உடுத்து உறங்கி வாழ்நாட் கழிப்பதைவிட மக்களால் அடையத் தக்க வே வேறு சிறந்த பொருள் இல்லையென்றே பெரும்பாலார் நினைக் கின்றார்கள். அப்படி நினைத்தால் மக்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் வேற்றுமை யாது? மக்களினுந் தாழ்ந்த ஆடு மாடு குதிரை முதல் ஈ எறும்பு புழு ஈறான எல்லாச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/157&oldid=1585749" இலிருந்து மீள்விக்கப்பட்டது