உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரைமணிக்கோவை

135

ஓர் அருமையான நூலைக் காணவேண்டுமானால் எத்தனையோ ஊர்களுக்குப் போய் அலைந்து திரிந்து தேடிப் பார்க்க வேண்டும்; இப்படித் தேடித் திரிவதற்கு எவ்வளவு நாட்கள் செல்லும்! எவ்வளவு பொருள் செலவாகும்! எவ்வளவு பாடும் உழைப்பும் வேண்டும்! இத்தனை இடர்ப் பாடுகள் இருந்தமையினாலேயே பழைய காலத்திற் கற்றவர் தாகை மிகுதியாயில்லை; கல்வி பரவவும் இல்லை, வளரவும் இல்லை. ஆனால் இக்காலத்திலோ வெள்ளைக் காரர் கண்டுபிடித்த அச்சுப் பொறிகளின் உதவியால் பல் வேறு நூல்களும், பல வேறு புதினத் தாள்களும், ஒவ்வொரு நொடியுங் கோடி கோடியாக அச்சிற் பதிக்கப்பட்டு உலக மெங்கும் பரவிக் கொண்டிருக்கின்றன. இதனால், எவ்வளவு ஏழையா யிருப்பவர்களும் சிறிது பொருள் செலவு செய்து, தமக்கு வேண்டிய நூல்களை எளிதில் வாங்கிக் கற்று கல்வியில் தேர்ச்சி பெறுகின்றார்கள். இதனால் கல்வியானது எங்கும் பரவுகின்றது.; கற்றவர் தொகை மிகுதிப்படுகின்றது. நாகரிகம் எங்கும் பெருகி, எங்கும் அறிவுமணங் கமழ்ந்து இன்ப ஒளி வீசுகின்றது. இத்தனைப் பெரும்பேறுகளும் காக்ஸ்டன் Caxton) என்னும் வெள்ளைக்கார அறிஞர் தமது பகுத்துணர்வினைப் பயன்படுத்தி அச்சுப்பொறியைக் கண்டுபிடித்தமையால் விளைந்தவைகள் அல்லவோ?

க்

இன்னும் இங்ஙனமே வெள்ளைக்கார துரைமக்கள் அல்லும் பகலும் தமது அறிவைச் செலுத்தி, இதுகாறுங் கண்டுபிடித்திருக்கும் பொறிகளால் இதுகாறும் விளைந்த விளைந்திருக்கின்ற நலங்கள் அளவுக்கு அடங்கா. அவர்கள் இவ்வளவிலே ஓய்ந்து விடாமல், ன்னும் தமது உணர் வினைப் பல துறைகளிற் செலுத்தி இன்னும் பல புதுமை களை நாடோறும் கண்டறிந்து வருதலால், இன்னும் உலகத்தில் உள்ள மக்களுக்கு வரப்போகும் நலங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கின்றன! அவை எல்லாம் ப்போது யாரால் அளவிட்டுச் சொல்ல முடியும். ஆகவே பகுத்து ணர்ச்சியைப் பெற்ற மக்களாகிய நாம் விலங்கினங் களைப் போல வீணே உண்டு உறங்கி இன்புற்றுக் காலங் கழித்தலிலேயே கருத்தைச் செலுத்திவிடாமல், அப்பகுத் துணர்ச்சியைப் பெற் ற நம்மிற் சிலர் அதனை மிக நன்றாய்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/168&oldid=1585760" இலிருந்து மீள்விக்கப்பட்டது