உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

மறைமலையம் 19

பாட்டுக்களை எப்படி எப்படிப் பாடினார்களோ, அவ் வப்படியே அப்பாட்டுக்களையெல்லாம் நாம் இருந்த த்திலிருந்தே கேட்டு இன்புறும் இன்புறும் பெரும் பேற்றை வ்விசைக்கருவியானது நமக்குத் தந்திருக்கின்றதன்றோ? இத்தனை இ இன்பமும் நாம் எளிதில் அடையலானது எதனால்? எடிசன் என்னும் துரைமகனார் தமது பகுத் துணர்ச்சியைச் செலுத்தி எவ்வளவோ அரும்பாடுபட்டு இவ் இசைக் கருவியைக் கண்டு பிடித்ததனாலன்றோ? அவர் தமது பகுத்துணர்வினைப் பயன்படுத்தாமல், மற்ற மக்களைப் போல் உண்பதிலும் உடுப்பதிலும் உறங்குவதிலும் தமது காலத்தைக் கழித்திருந்தனராயின், நாம் அருமந்த இசைக் கருவியைப் பெறுதலும், நம் முன்னோர்களின் தித்திக்குஞ் சுவைப் பாட்டுகள், அயல் நாட்டு இசைவாணரின் பல திற வரிப் பாட்டுகள் என்னும் இவைகளைக் கேட்டு மகிழ்தலும் இயலுமோ?

இன்னும் பாருங்கள்! நாம் படிக்கும் புத்தகங்களையும், அவ்வவ்வூர்களில் நடக்குஞ் செய்திகளை அறிவிக்கும் புதினத் தாள்களையும் அச்சுப்பொறிகள் சிறிது நேரத்தில் ஆயிரக் கணக்காக அச்சுப் பதித்து நமக்குக் குறைந்த விலைக்குத் தருகின்றன. அச்சுப் பொறிகள் இல்லா முன் நாளிலோ இவ்வளவு எளிதாக நாம் விரும்பிய அரிய பெரிய நூல்களைப் பெற்றுக் கற்றுத் தேர்ச்சி அடைதல் ஏலாது. பழைய நாட்டில் ஓர் ஊரிற் சிற்சிலரே கற்றவராய் இருப்பர். அவர்கள் தாம் கற்கும் நூல்களைப் பனை ஏடுகளிற் பாடுபட்டு எழுதிக் கருத்தாய் வைத்திருப்பர். அவர்கள் தம்மிடம் கல்வி கற்கவரும் மாணாக்கர் சிலர் மட்டும் தம்மிடத்துள்ள ஏட்டுச் சுவடிகளைப் பார்த்துச் சிறிது சிறிதாய் எழுதிக் கொள்ளும்படி அவர்க்குக் கொடுப்பார் களே யல்லாமல் எல்லாரும் பெற்றுப் பயிலும்படி அவ் வேட்டுச் சுவடிகளை எல்லார்க்கும் எளிதிற் கொடார். அல்லது அப்படிக் கொடுத்தாலுங்கூட ஓர் ஏட்டுச் சுவடியில் எழுதப்பட்டிருக்கும் ஒரு நூலை ஒரே காலத்தில் பற்பலர் எப்படி எடுத்துக் கற்க முடியும்? மேலும் தமிழ்மொழியில் உள்ள சிறந்த நூல்கள் பலவும் ஓர் ஊரில் உள்ள கற்றவர் சிலரிடத்தில் ஒருங்கே காணப்படுவதும் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/167&oldid=1585759" இலிருந்து மீள்விக்கப்பட்டது