உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை :

133

அகன்றுள்ள நாடுகளெல்லாம், இங்ஙனம் முற்காலத்தில் சய்திகள் அனுப்புதல் முடியுமா? சிறிதும் முடியாதே. வ்வளவு வசதிகளும் எதனால் வந்தன? ஆங்கில அறிஞர் கள் இடை விடாது தமது பகுத்துணர்ச்சியைப் பயன்படுத்தி மின்சாரம் முதலான கட்புலனாகா நுண் பொருள்களின் இருப்பையும், வலிவையும், இயக்கத்தையும், பயனையும் கண்டுபிடித்தமையால் அன்றோ?

ரு

இன்னும் ஒரு புதுமையைப் பாருங்கள்! ஒரு நூற் றாண்டுக்கு முன் இருந்த நம் முன்னோர்களிற், பட்ட மரமும் தளிர்க்கக் கேட்ட பறவைகளும் மயங்க இன்னிசை பாடு வதில் வல்லவர்கள் எத்தனையோ பெயர் இருந்தார்கள்! ஆனால், அவர்கள் இறந்ததும், அவர்களின் தேன்போன்ற குரலும் அவர்கள் மிழற்றிய இனிய பாட்டுகளும் அவர்க ளோடு கூடவே இறந்து போய்விட்டன. அவற்றை நாம் மறுபடியும் செவி கொடுத்துக்கேட்பது இனி எக்காலத்தும் இயலாது. இங்ஙனமாக ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்டிருந் தோரின் நிலை அவ்வாறாய் முடிய, இந்த ஒரு நூற்றாண்டுக் குள் நாம் பிறப்பதற்கு முன்னிருந்த இசைவல்லோர்களின் நிலை அங்ஙனம் நாம் ஏமாறி வருந்தத் தக்கதாய் முடிந்து போகவில்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னிருந்து முக் கனியினுங் கற்கண்டினும் இனிக்கப் பாடிய பாவாணர்கள் இவ்வுலக வாழ்வை நீத்துப்போனாலும், அவர்களுடைய அருமைக் குரல் ஒலியும், அவர்கள் பாடிய இன்னிசைப் பாட்டுகளும் நம்மை விட்டு நீங்கிப் போகவில்லை. எப்படி யெனில் அமெரிக்கா தேசத்தில் அறிவியலிற் சிறந்து விளங்கிய எடிசன் என்னுந் துரைமகனால் ஆக்கிய ஒலி யெழுதி (Gramophone) என்னும் பொறியானது, அப்

L

பாவாணர்கள் பாடிய ன்னிசைப் பாட்டுகளையும் அவர்களுடைய இனிய குரலொலிகளையும் அப்படியே பாடிக்காட்ட, அவைகளைக்கேட்டு நாம் வியந்து மகிழ் கின்றனம் அல்லோமோ? அவ் இசைவாணர்கள் இறந்து போயினும், அவர்கள் பாடிய இசைகள் இறந்து போகாமல், நாம் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழும்படி பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன அல்லவோ? இது மட்டுமா! எந்தெந்தத் தேசத்தில் எந்தெந்த மொழியில் எவ்வெப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/166&oldid=1585758" இலிருந்து மீள்விக்கப்பட்டது