உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

  • மறைமலையம் 19

வாங்கத் தக்கபடி அவைகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அது மட்டுமோ! ஒருநாட்டில் மழை பெய்யாது பஞ்சம் வந்தால், அயல் நாடுகளில் விளைந்த உணவுப் பண்டங்களை நீராவி வண்டிகளாலும், நீராவிக் கப்பல்களாலும் உடனுக்குடன் அங்கே கொண்டுவந்து சேர்ப்பித்து அங்குள்ள பஞ்சத்தைத் தீர்த்துப், பல்லாயிரம் மக்களை உயிர்பிழைக்கச்செய்கின்றார்கள். இவை போல ன்னும் எண்ணில் அ எண்ணில் அடங்காத எத்தனையோ நலங்க ளெல்லாம், பகுத்துணர்ச்சியிற் சிறந்த ஆங்கிலப் பேர் அறிவாளிகள் கண்டுபிடித்த நீராவிப் பொறிகளால் நாம் அடைந்துவருகின்றனம் அல்லமோ?

லி

இவை

மட்டுமோ!

லங்கையில் உள்ளவர்கள்

இந்தியாவில் இருப்பவர்களோடும், இந்தியாவில் உள்ள வர்கள் இலங்கையிலிருப்பவர்களோடும், ஒரு வீட்டுக்குள் இருப்பவர்களைப் போற் பேசிக் கொள்வதற்கு வாய்த் திருக்கும் வியப்பான வசதியை எண்ணிப் பாருங்கள்! இஃது எதனால் வந்தது? மின்சாரத்தின் இயக்கத்தையும், அதனைப் பயன்படுத்தும் முறைகளையும் ஆங்கில அறிஞர்கள் தமது பகுத்துணர்ச்சியின் நுட்பத்தாற் கண்டுபிடித்தமை யால் அன்றோ? இலங்கையிலிருப்பவர்கள் இந்தியாவி லிருக்கும் தம் நண்பர்கட்குச்செய்திகள் தெரிவிக்க வேண்டுமானாலும், இந்தியாவிலிருப்பவர்கள் இலங்கையி ரு க்குந் தம் நண்பர்கட்குச் செய்திகள் தெரிவிக்க வேண்டுமானாலும் அவர்கள் அவற்றை ஒரு கடிதத் துண்டில் எழுதித் தந்திச்சாலைக்கு அனுப்பி, அதற் குரிய சிறு கூலிக்காசையுங் கொடுத்து விட்டால் ஒரு மணி நேரத்தில் இலங்கையி லிருப்பவர்க்கோ அந்தச் செய்திகள் உடனே தெரிவிக்கப் பட்டிருக்கின்றன. அடுத்த மணி நேரத்தில் அவற்றிற்கு மறுமொழியும் வருகின்றது. இந்தப்படியாகவே, இந்தியா, இலங்கைக்கு ஆறாயிரம் மைல் எட்டியுள்ள சீமை முதலான இடங்களுக்குஞ் சில மணி நேரத்தில் செய்திகள் தெரி வித்தலும், ஆங்காங்குள்ள செய்திகளைத் தெரிந்து கொள்ளுதலும், ஒவ்வொரு நொடிப் பொழுதும் நடந்து காண்டிருக்கின்றன. ஆறாயிர மைல் எண்ணாயிர மைல்

த்

இந்தியாவிலிருப்பவர்க்கோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/165&oldid=1585757" இலிருந்து மீள்விக்கப்பட்டது