உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137

3. தென்புலத்தார் யார்?

திருவள்ளுவர் ஆண்டு 1962 தைப்பூச நாளன்று பல்லாவரத்தில் நடைபெற்ற பொதுநிலைக் கழக இருபதாம் ஆண்டு விழாப் பேரவையில் திருவாளர் கி. குப்புசாமி முதலியாரவர்கள் "தென்புலத்தார் தெய்வ" மென்னுந் திருக்குறளிற் போந்த தென்புலத்தாரென்னுஞ் சொல்லுக்குப் பரிமேலழகியார் உரையைத் தழுவி உரைத்த கொள்கை யினை யாம் உடன்படாது, அச் சொல்லுக்கு வேறுபொருள் கூறினேமாக, அதுபற்றி அறிஞர்க்குள் வழக்கு நேர்ந்த தாகலின், யாம் கொண்ட கருத்தினை நன்குவிளக்கிக் காட்ட வேண்டுமென அன்பர் பலர் கேட்டுக் கொண்டதற்கிணங்கி, அதனை இங்கே இயன்றமட்டும் விளக்குவான் புகுந்தேம்.

தன்புலத்தாரென்பதற்குப் பரிமேலழகியாருரைத்த

பொருள் இது: "தென்புலத்தார் பிதிரர்; பிதிரராவார் படைப்புக் காலத்து அயனாற் படைக்கப்பட்டதோர் கட வுட்சாதி; அவர்க்கு டம் ம் தென்றிசை யாதலின் தென் புலத்தா ரென்றார்.”

இனித், தெற்கே குமரிநாடு இருந்தகாலத்து அதன் கண் ஓடிய பஃறுளி யாற்றங்கரையை யடுத்த பெருநாட்டில் அரசு செலுத்திய பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி மேலதாகவைத்து நெட்டிமையார் என் னு நல்லிசைப் புலவர் பாடிய ய ஆவு மானியற் பார்ப்பன மாக்களும் (புறநானூறு, ) என்னுஞ் செய்யுளிலும்,

66

“தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதர்வர்ப் பெறாஅ தீரும்"

ம்

என்று தென்புலம் வாழ்நர் குறிக்கப்படுகின்றனர். இச் செய்யுளுக் கெழுதப்பட்ட பழைய உரையில் தென்புலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/170&oldid=1585762" இலிருந்து மீள்விக்கப்பட்டது