உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

மறைமலையம் 19

வாழ்நர் என்பதற்குத் "தென்றிசைக்கண் வாழ்வோராகிய நுங்குடியிலிறந்தோர்" என்பது பொருளாக எழுதப்பட்டிருக்

கின்றது.

தென்புலத்தார் என்னுஞ் சொல்லுக்குப் பரிமேழகியா ருரைத்த பொருளும், புறநானூற்று உரைகாரர் உரைத்த பொருளும் ஒன்றோடொன்று ஒவ்வாமல் மாறுபட்டு நிற்றல் மேலேகாட்டிய அவ் விருவ ருரைகளையும் ஒத்து நோக்குவார்க்கு நன்கு விளங்கும்.

இனி, இவ்விருவேறு உரையுள் எஃது அச்சொற் பொருள் உண்மை யறிவிப்ப தென்பது ஆராயற்பாற்று. இந் நிலவுலக மெங்கணுமுள்ள மக்கட் கூட்டத்தாரிற், பண்டு தொட்டு நாகரிகத்திற் சிறந்தார் முதல் அதிற் சிறவாதார் ஈறான எல்லா வகுப்பினரும் இறந்துபட்ட தத்தம் முன் னோர்களை நினைந்து வழிபாடாற்றி வந்திருக்கின்றனர். தம் முன்னோரை நினைந்து வழிபடாத ஒரு வகுப்பினரை யாண்டுங் காண்டல் யலாது. எங்கு முள்ள மக்களின்

வ்வியற்கை வழக்கத்துக்கு இசையவே நம் பண்டை தமிழ்மக்களுந் தம்மை நாகரிக வாழ்க்கையில் வாழச்செய்த நம் முன்னோரை நினைந்து வழிபாடு செய்து வந்தனர். இவர் அங்ஙனந், தன் முன்னோரை வழிபட்டுவந்த குறிப்புப் புறநானூற்றுரைகாரர் “தென்றிசைக்கண் வாழ்வோராகிய நுங்குடியில் இறந்தோர்” என்று உரைத்த வுரையால் தெற்றென விளங்கா நிற்கின்றது.

மற்றுப், பரிமேலழகியார் உரைத்த உரையோ தமிழரில் இறந்துபட்ட முன்னோரைக் குறியாதாய்த் 'தென்புலத்தார்’ என்பதற்குப் 'பிதுரர்' என்று பொருள் கூறி, “அப் பிதுர ராவார் படைப்புக்காலத்து அயனாற் படைக்கப்பட்ட தோர் கடவுட்சாதி” என்றும், “அவர்க்கிடந் தென்றிசை என்றும் அவர் வரலாறு விரித்தது. எனவே, பிதுரர் என்பார் தமிழரின் இறந்துபட்ட முன்னோரல்ல ரென்பதூஉம், அவர் நான்முகனாற் படைப்புக்காலந் தொட்டே படைக்கப்பட்டுத் ற் தென்றிசைக்கண் வாழும் ஒரு கடவுள் வகுப்பினராவ ரென்பதூஉம் பரிமேலழகியார் கருத்தாகின்றன. ஆனால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/171&oldid=1585763" இலிருந்து மீள்விக்கப்பட்டது