உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரைமணிக்கோவை

139

வடநூல்களிலோ பிதுரரைப் பற்றிய வரலாறு பரிமேலழகியார் கூறியபடி காணப்படவில்லை. அரி வம்சத்திலும் வாயு புராணத்திலும் அவர் வரலாறு இங்ஙனஞ் சொல்லப் படுகின்றது: “தேவர்கள் நான்முகனை வணங்காது இகழவே, அவன் அவர்களைப் பேதையராகும்படி வைதான்; அது கண்டு அவர் தாஞ் செய்த பிழையைப் பொறுக்கும்படி வேண்ட, அவன் அவர்களை நோக்கி “நீவிர் நும்புதல்வர் பால் அறிவுபெறக்கடவீர்’ என்று ஏவினான். அங்ஙனமே அத்தேவர்கள் தம் புதல்வர்பாற் றவச்சடங்குங் கழுவாய்ச் சடங்குங் கற்றுணர்ந்து, அங்ஙனங் கற்றுணர்ந்தமை நோக்கித் தம் புதர்வர்களையே ‘பிதுரர்’ என வழங்கினார்; அக்காரணம் பற்றியே தேவர்களின் புதல்வர்கள் முதற் பிதுரராயினர். “ஏனைய புராணங்களும் பிதுரர் வரலாற்றை இவ்வாறே நுவல்கின்றன. ஆனால், மனுஸ்மிருதியோ, இரணியகருப்பன் மகன் மனு; அவன் புதல்வர்களான விராஜர், மரீசி, அத்திரி, பிருகு, ஆங்கிரசர், புலத்தியர், வசிட்டர் முதலான ஏழு முனிவர்களின் மக்களே ‘பிதுரர்’ ஆவரென்றும், இவர்கள் எழுவகைக் கூட்டத்தினராய்ச் சாத்தியர்களுக்கும், அக்நிஷ்வாத்தர்களுக்கும், தைத்தியர் தானவர் இயக்கர் கந்தருவர் நாகர் இராக்கதர் சுபர்ணர் கின்னரர்களுக்கும், பிராமணர்களுக்கும், சத்திரியர்களுக்கும், வைசியர்களுக்கும், சூத்திரர்களுக்கும் பிதுரராவரென்றும் நுவலாநிற்கின்றது (3-194-197) இந் நூல்களிலாதல், ஆபஸ்தம்பர் கௌதமர் வசிட்டர் போதாயனர் இயற்றிய தருமசூத்திரங்களிலாதல் சாங்காயனர் ஆஸ்வலாயனர் பாரஸ்கரர் காதிரர் கோபிலர் இரணியகேசின் ஆபஸ்தம்பர் இயற்றிய கிருகிய சூத்திரங்களிலாதல் மேற்கூறிய 'பிதுரர்’ தென்புலத்தில் உள்ளவராகக் குறிப்பிடப்படவில்லை.

இனி, இந் நூல்களுக்கும் வடமொழியில் உள்ள மற் றெந்நூல்களுக்கும் முற்பட்டதாகிய இருக்கு வேதமானது எவரைப் பிதுரர் என்று கூறுகின்றதென்பதைச் சிறிது ஆராய்வாம். இருக்குவேதப் பத்தாம் மண்டிலத்தின்கண் உள்ள பதினைந்தாம் பதிகமானது பிதுரர் கண்மேற் பாடப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/172&oldid=1585764" இலிருந்து மீள்விக்கப்பட்டது