உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

மறைமலையம் 19

பட்டிருக்கின்றது. அதனைப் பாடிய பண்டை ஆரியர், இறந்துபோன நம் முன்னோரையே பிதுரர்களாக விளித்துப் பாடியிருக்கின்றனர்; அவர் பாடிய அப்பதிகத்தின் சில பகுதிகளை இங்கே மொழி பெயர்த்துத் தருகின்றாம்:-

"சோமபானத்தில் ஒருகூறு பெறுதற்குத்

தக்காரான மூதாதைகள் கீழுள்ள நடுவுள்ள

மேலுள்ள உலகங்கட்கு மேலேறுக!

ஆவிவடிவத்தைப் பெற்ற அவர்கள் அமைதியும் அறமுமுடையராய் யாம் அழைக்குங்கால் வந்து எமக்கு உதவி செய்க!

முன்னரே இறந்து போனோரும்,

அவர்க்குப் பின்னர் இறந்துபோனோரும்,

இம் மண்ணுலகத்திற்கு அணித்தாகத் தங்கினோரும்,

வல்லரான தேவர்களிடையே தங்குவோரும் ஆகிய மூதாதைகளுக்கு

இவ்வணக்கத்தைச் செலுத்துவோமாக!

சோமநறவைப் பெறுதற்குத் தக்காரான,

எங்கள் சோமவிருத்திற்குச் சிறப்புடன் வந்தோரான எங்கள் பழைய மூதாதைகளுடன் விழைவுடையாரொடு விழைவுடையனாய்க் களிப்புடையனாய் இயமன் தான்வேண்டியபடி யாமிடும் அவியுணவை அயில்க!

தீக்கடவுளே, ஒளியுலகில் உறைபவராய்,

முதற் பிறந்தவராய், இறைவனை வழுத்துபவராய், அவியுணவை அயில்பவரும் பருகுபவருமாய்,

மெய்ம்மையுடையவராய்த் தேவர்களோடும்

இந்திரனோடும் இயங்குபவராய் உள்ள

எம் எண்ணிறந்த பண்டை மூதாதைகளுடன் நீ வருக!

ஓ ஜாதவேதனே, இங்கு வந்தவரும் வராதவரும், யாம் அறிந்தவரும் அறியாதவரும் ஆன

1

2

8

3

MO

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/173&oldid=1585765" இலிருந்து மீள்விக்கப்பட்டது