உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைமணிக்கோவை

மூதாதைகள் இத்துணைய ரென்பதை

நீ நன்குணர்வை; அவரவர் பங்குக்கென்று

நன்கு சமைத்துவைக்கப்பட்ட

இவ்வேள்வியை ஏற்றுக் கொள்க!

தீயில் எரிக்கப்பட்டவரும்,

எரிக்கப்படாமற் புதைக்கப்பட்டவரும்

ஆன அவர்கள் வானுலகின் நடுவில்

தாம் பெறும் அவியுணவினாற் களிகூர்கின்றார்கள்; ஓ முதல்வனே, அவர்கட்கு ஆவியுலகத்தையும்

அவர்கட்குரிய ஆவியுடம்பையும்,

நின்னுள்ளம் வேண்டியபடியே ஈந்திடுக!

66

L

141

13

14

இவ் விருக்குவேதப்

இங்ஙனம் போந்த போந்த பழை பழைய இவ் வி பதிகத்தில், ஆரியரின் மூதாதைகளே ‘பிதுரர்' ஆதலும்; அவர்கள் தாந்தாஞ் செய்த நல்வினை தீவினைக்கேற்ப இறந்தபின் இம் மண்ணுலகத்திற்கு அணிமையிலும் இதற்கு மேல் நடுவணதான வானுலகிலும் அதற்கு மேலுள்ள துறக்க வுலகிலுஞ் சென்று வைகுதலும்; அவர்தம் மூதாதைகள் இறந்தஞான்று அவர்களுள் ஒரு பகுதியாரை நெருப்பிலிட்டு எரித்தும், மற்றொரு பகுதியாரை மண்ணின் கீழிட்டுப் புதைத்தும் வந்தனரென்பதனால் அப் பிதுரர், பரிமேலழகியார் கூறியபடி அயனாற்படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி” யாகாமையுந் தெற்றென விளங்காநிற்கும். ஆரியரின் மூதாதைகளான அப் பிதுரர்கள், இயமன் உலகத்திலும் பகலவன் உலகத்திலுந் திங்கள் உலகத்திலுஞ் சென்று வைகுவரென அவ்விருக்குவேத ஒன்பதாம்மண்டிலத்தின் ஆம்பதிகத்து (8-9-10) ஆஞ் செய்யுட்கள் மொழிகின்றனவே யன்றி, அவர் தென்புலத்தின்கட் சென்று வைகுவரெனக் கூறுகின்றிலது. மேலும், ஆரியர் தம்மைச் சேர்ந்தார் உயிர் துறக்குங்கால் இயமனை வேண்டிப் பாடிய பதிகத்தில், இறந்து செல்வோன் உயிரைநோக்கி,

“ஓடுக! சரமாவின் குட்டிகளும், பழுப்புநிறத்தொடு

பலவரிகளையுடையனவும் நான்கு கண்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/174&oldid=1585766" இலிருந்து மீள்விக்கப்பட்டது