உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

142

மறைமலையம் 19

வாய்ந்தனவும் ஆகிய இரண்டு நாய்களையும் நின் இனிய வழியினிடையே விரைந்து கடந்து செல்க!

இயமனுடன் கூடி மகிழ்ந்திருப்பாரான இரக்க

நெஞ்சமுள்ள மூதாதைகள்பால் விரைந்து அணுகுக!”

(இருக்குவேதம், 10, 14, 10)

என்று கூறுதல்கொண்டுந், தம் மூதாதையர் இயமனுலகத் திற்குச் செல்வதாகப் பண்டையாரியர் நம்பி வந்தமை நன்கு புலனாகாநிற்கும். இயமன் தென்புலத்திற்கு உரியவனாகப் பிற்காலத்தெழுந்த வடநூல்கள் நுவலுங்கதை, பண்டை வடநூலாகிய இருக்குவேதத்தில் யாண்டுங் காணப்படாமை கருத்திற்பதிக்கற்பாற்று. அவர் சென்று வைகும் இயமனுலகு, வானநாட்டின் நடுவண் உள்ளதாகவே முன்னர்க்காட்டிய 15ஆம் பதிகத்தின் 14ஆஞ் செய்யுள் ஐயமற வோதுதல் காண்க.

இன்னும், அவ்விருக்குவேதப் பத்தாம்மண்டிலத்தின் பதினாறாம் பதிகத்து 3ஆஞ் செய்யுளானது சய்யுளானது இறந்து செல்லும் ஒருவனுயிரை நோக்கிக் கூறுகின்றுழிப்,

"பகலவன் நின்கண்களைப் பெறுக; காற்று நின் உயிர்ப்பைப்

பெறுக; நின் வினைப்பயனுக்குத் தக மண்ணுலகத்திற்கோ விண்ணுலகத்திற்கோ நீ செல்க!

நின்வினை அங்ஙனமாயின் நீ நீரினுட் செல்க; அல்லது செடி களினுட் புகுந்து, நின் உறுப்புகள் எல்லாவற்றுடனும் ஆண்டு வைகுக!

என் றுரைக்குமாற்றால், நல்வினை செய்த உயிர் விண்ணுலகத்திற் சென்று வாழுமென்பதும், நல்வினை சய்யாத உயிர் மண்ணுலகத்தை யடுத்துப் பேய்களாக அலைந்து திரிதலே யல்லாமல், நீரினுட் புகுந்து நீரணங்காகவுங் கானகத்துள்ள செடிகளினூடே புகுந்து காட்டணங்காகவும் உறையுமென்பதும் பண்டையாரியர்தம் நம்பிக்கையாதல் நன்கு புலனாகின்ற தன்றோ? இங்ஙனமெல்லாம் இறந்துசென்ற உயிர்கள் வைகும் இடங்கள் வான்நடுவணதான இயமனுலகும், ஞாயிறு திங்களுலகும், மண்ணுலகும், மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவணதாம் உலகும், நீருங் காடுமேயாம் என இருக்குவேதம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/175&oldid=1585767" இலிருந்து மீள்விக்கப்பட்டது