உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நுவலக்

  • உரைமணிக்கோவை :

காண்கின்றனமேயன்றி, அது

143

தென்புலம் என

நுவலுதலை அதன்கண் யாண்டுங் கண்டிலேம். அது நிற்க.

வே

இனிப், பிதுரரை ஒரு கடவுட்சாதி யென்று கூறிய பரிமேலழகியாருரை ஒரு சிறிதும் பொருந்தாமை இருக்கு த ஆராய்ச்சியால் தெற்றென விளங்குதலும் ஈண்டுக் காட்டுவாம். தேவர்கள் இயங்கும் நெறியையும், இறந்து செல்லும் பிதுரர்கள் இயங்கும் நெறியையும், இருக்கு வேதப் பத்தாம் மண்டிலப் பதி னட்டாம் பதிகத்து முதற் செய்யுளும், இரண்டாம் பதிகத்து ஏழாஞ் செய்யுளும் முறையே,

66

ஓ மிருத்யுவே, தேவர்கள் வழக்கமாய்ச் செல்லும் நெறியை அகன்று நினக்குத் தனியேயுரிய நெறியின்கண் இங்கிருந்து புறப்பட்டுச் செல்க!”

என்றும்,

“அங்கியே, பிதுரர்கள் செல்லும் நெறியை நன்கு தெரிந்து கொண்டு, அதன் நெடுகச் சுடர்ந்தெரிந்து பேரொளி விளக்கத்தைச் செய்க!”

என்றும் வேறுவேறு கூறுதலை உற்றுநோக்க வல்லார்க்குப் பண்டை ஆரியர்கள் தேவரையும் பிதுரரையும் வேறு வேறாகக் கருதினரே யல்லாமற், பிதுரரையுந் தேவராகக் கருதிற்றிலரென்னும் உண்மை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் நன்கு விளங்கா நிற்கும். ஆகவே, பண்டை யாரியர் இயற்றிய வேத வழக்குக்கு முற்றும் முரணாகப் பிதுரரைத் தேவரென்றுரைப்போர் வேதவழக்கைத் தழுவிய “வைதிக ராதல் யாங்ஙனம் என மறுக்க,

ருக்கு வேதத்தை எழுத்தெண்ணிப் பயின்றவரும், அதனை முதன்முதல் அச்சிற் பதிப்பித்து, அதன் பதிகங்கள் பலவலற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துதவியருமான மாக்ஸ்மூலர் என்னும் ஆசிரியர் (Professor Max Muller): வேதத்தில் முதாதையர் அல்லது பிதிரர் தேவர்களுடன் சேர்த்து வழுத்தப்படுகின்றனர்; என்றாலும், அவர்கள் மற்றவருடன் ஒன்றாக வைத்து மயங்கக் கூறப்படவில்லை.. தேவர்கள் பிதுரர்களாதல் எஞ்ஞான்றும் இல்லை. மனு வினாலும் யாஞ்ஞியவற்கியராலும் பிதுரர்கள் ஒரேவொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/176&oldid=1585768" இலிருந்து மீள்விக்கப்பட்டது