உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

மறைமலையம் 19

காற் பண்டைத் தேவவகுப்பினர் நிலைக்கு உயர்த்தப்பட்டுத் தேவ' என்னும் அடைமொழியால் வழங்கப்படினும், பிதுரருந் தேவருந் தனித்தனித் தோற்றமுடைய ரென்பதும், மக்கள் உள்ளமானது தான் வழிபடுதற்கென்று வகுத்துக் கொண்ட இருவேறு நிலைகளைக் குறிப்பவரென்பதும் நாம் எளிதிற் காண்டல் கூடும். இஃது என்றும் மறக்கப்படாத ஒரு பாடமாக இருத்தல் வேண்டும். இருக்குவேத, --ஆம் ரு மண்டிலத்து 52ஆம் பதிகத்தின் 4 4ஆஞ் செய்யுளில் இங்ஙனங் காண்கின்றோம்:

“மேலெழுகின்ற விடியற்காலம் என்னைக் காப்பதாக! ஓடுகின்ற யாறுகள் என்னைக் காப்பனவாக! திண்ணிய மலைகள் என்னைக் காக்க!

தேவர்களை அழைக்கும் இப்போது பிதுரர்கள் என்னைக் காப்பாராக!”

இச் செய்யுளில், விடியற்காலமும் யாறுகளும் மலை களுந் தேவர்கள் வணக்க வுரையிற் சேர்த்துச் சொல்லப் படினும், அவற்றின் வேறான இருப்பு உடையராகப் பிதுரர்கள் நுவலப்படுதல் இனிது விளங்குதல் காண்க.

இதுவேயுமன்றி, மூதாதையருள்ளுந் துவக்கத்தி லிருந்தே இரு வேறு வகையினர் கருதப்படுதலும் நாம் பகுத்துணர்ந்து கொள்ளல் வேண்டும்; அவருள் ஒரு பகுதி யார் நெடுங்காலத்துக்கு முன்னரே இறந்து போகி அரைவாசி மறக்கப்பட்டவர்களாய்ச், சில குடும்பங்களின் உண்மையில் இல்லாத முன்னோராவர், அல்லது, வேதநூற் புலவரின் கருத்துப்படி மக்கட்டொகுதி முழுதுமே யாவர்; மற்றொரு பகுதியார் சிறிது காலத்திற்கு முன்னரே இறந்துபோகி, இன்னும் பின்னுள்ளோரால் நினைந்து பணியப்படுவோ ராவர்.

"மிகப் பழைய மூதாதையர் பொதுவாகத் தேவர்களுக்கு அணுக்கராவர். இறந்து சென்ற உயிர்களுக்கு அரசனான இயமன்றன் உலகத்திற்குச் சென்று, அங்கே அவர்கள் தேவர் சிலருடன் கூடியிருப்பவராக அடிக்கடி நுவலப்படுகின்றனர். (இருக்குவேதம், தேவாநாம் சதமாதா; இருக்குவேதம், தேவநாம் வசநீ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/177&oldid=1585769" இலிருந்து மீள்விக்கப்பட்டது