உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

உரைமணிக்கோவை

145

இன்னும், பாட்டனுக்குப் பாட்டனாவார் துறக்க வுலகையும், பாட்டன்மாராவர் வானுலகையுந், தாதையர் மண்ணுலகையுஞ் சார்ந்திருப்பராய், முதற்சொன்னவர் ஆதித்தியருடனும், இரண்டாவது சொன்னவர் உருத்திர ருடனுங், கடைசியிற் சொன்னவர் வசுக்களுடனுங் கூடி யிருப்பவராகக் கூறப்படுதலைச் சிலகாற் காண்கின்றேம்.

66

"இயமனே பிதுரரில் ஒருவனாக வைத்து வழுத்தப் படுதலுடன், அவன் அ

மக்களுள் முதன்முதல் இறந்தவ னன்றும், மூதாதையர் செல்லும் நெறியாகி மேற்றிசை யிற் பகலவன் மறையுமிடத்துக்குச் செலுத்தா நின்ற பிதிரியானத்தை மிதித்தவனாவன் என்றும் வழுத்தப்படு கின்றான்; (இருக்குவேதம்,க0, உ,எ;க0,கச,க-உ)

66

அவன்

வைவசுவதன் என்றும்(க0,ருஅ,க), வைவசுவதன் மகன் என்றுஞ் சொல்லப்படுகின்றான். பின்வந்த அதர்வவேத காலத்தில் இயமன் மக்களுள் முதற்றோன்றியவனாகக் சொல்லப்படுகின்றான் (அதர்வ வேதம் கஅ, ங, கங இருக்கு வேதம், க0, கச, க - உடன் ஒத்து நோக்குக)

என்று மாக்ஸ்மூலர் என்னும் என்னும் ஆசிரியர் கூறுதல் போலவே, வேதநூலாராய்ச்சி வல்ல கீத் (A.B. Keith) என்னும் அறிஞருந், "தேவர்கள் நெறியானது பிதுரர்கள் நெறியின் வேறாவதென்றே அடுத்தடுத்துச் சொல்லப்படு கின்றது; வழியில் நாய்கள் இருக்குமென்பதனால் அந்நெறி யானது தனிப்பட்டதென்பதும், அமைதி வாய்ந்த தேவநெறியாகா தென்பதும் புலனாகின்றன. பெரிதாராய்ந் தெழுதியிருக்கின்றார்.

""

என்று

மேலே, மாக்ஸ்மூலர் ஆராய்ந்துரைத்த பகுதியாற், பிதுரர் இருவகையினராய், நெடுங்காலத்துக்கு முன்னரே இறந்துபட்டு, அவர்க்குப்பின் வந்தாரால் மறக்கப்பட்ட வரும், பிற்காலங்களில் இறந்துபட்டுப் பின்னுள்ளரால் நினைவு கூரப்பட்டவரும் ஆதலும், அவர் துறக்கம் வான் நிலம் என்னும் உலகுகளைச் சார்ந்து வைகுவார் ஆதலும்; பிதுரர்களுக்குத் தலைவனான இயமனே பண்டொருகால் மக்களுள் ஒருவனாய் இருந்து முதன்முதல் இறந்துபட்டோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/178&oldid=1585770" இலிருந்து மீள்விக்கப்பட்டது