உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

மறைமலையம் 19

அயனாற்

னாதலும்; அவனும் பிதுரரும் இருக்குமிடம் பகலவன் மறையும் மேற்றிசைக் கண்ணதாதலும் நன்கு புலனாகின்றன. இவை யவ்வளவும் இருக்குவேதப் பதிகங்களால் ஐயமறத் தெரிக்கப்படுமாறும் மேலே அவை தம்மை எடுத்துக் காட்டி விளக்கியிருக்கின்றேம். எனவே, பிதுரராவார் " படைக்கப்பட்டதோர் கடவுட் சாதி” என்றும், 'அவர்க்கிடந் என்றும் பரிமேலழகியாரும் அவரைப் பின் பற்றினாருங் கூறும் உரை, அவர்தாம் இறைவன் நூலாகக் கொண்ட பண்டை ஆரிய இருக்குவேத வுரைக்கே முற்றும் மாறாய் நிற்றல் கண்டு கொள்க.

தென்றிசை

கண்

இனி, வடக்கிருந்த ஆரியர்கள் இறந்துபோன தம் முன்னோரை நினைந்து வழிபட்டு வந்தாற் போலவே, தெற்கிருந்த தமிழர்களும் பண்டிருந்த தமது குமரி நாட்டின் நாகரிகத்திற் றலைசிறந்தாராய் வாழ்ந்து சென்ற நம் முன்னோரை நினைந்து வழிபட்டு வந்தாராகல் வேண்டுமென்பது, தொடக்கத்தில் எடுத்துக்காட்டிய "ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் என்னும் பழைய புற நானூற்றுச் செய்யுளிற் போந்த "தென்புலம் வாழ்நர்” என்னுஞ் சொற்றொடராலும், “தென்றிசைக் கண் வாழ்வோ ராகிய நுங் குடியில் இறந்தோர்” என்னும் அதன் பழைய வுரையாலும் நன்கு புலனாகின்ற தன்றோ? பண்டை நாளிலிருந்த 'குமரிநாடு' இப்போதுள்ள குமரி முனைக்குத் தெற்கே பெரும்பரப்பினதாய் இருந்தமையும், அதன்கட் பல்லாயிர ஆண்டுகட்குமுன் உயிர் வாழ்ந்த பழந்தமிழ் மக்கள் இம்மை மறுமைக்குரிய எல்லாத் துறைகளிலும் நாகரிகத்திற் றலைசிறந்து நின்றமையும், அந்நாட்டின்கட் செங்கோலோச்சிய நிலந்தரு திருவிற் பாண்டியன் அவைக்களத்தே தொல் காப்பியம் என்னும் ஒப்புயர்வற்ற செந்தமிழ்த் தனி முதல் நூல் அரங்கேற்றப்பட்டமையும், அஞ்ஞான்றிருந்த செந்தமிழ் மக்களின் நாகரிகத்தி லிருந்தே பிறநாடுகளிலிருந்த ‘ஆரியர்’, 'பாரசிகர்', 'எபிரேயர்' முதலான ஏனை மக்கட்பிரிவின ரெல்லாருஞ் சிறிது சிறிதாக நாகரிகம் இன்னதெனத் தெரிந்து சீர்திருந்தினமையும், இன்னும் இதனை யொட்டிய பிற வரலாற்றுக் குறிப்புகளும் மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் எமது விரித்து

பருநூலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/179&oldid=1585771" இலிருந்து மீள்விக்கப்பட்டது