உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை

147

விளக்கியிருக்கின்றேம். அத்துணை நாகரிகத்திற் சிறந்த பண்டைத் தமிழ்மக்கள், தாம் இருந்த தென்புலமாகிய தமிழகத்தில் தமக்கு முன்னரே நாகரிகமுடையராயிருந்து இறந்துபோன தம் மூதாதைகளையே ‘தென்புலத்தார்' என வழங்கி வழிபட்டு வாழ்ந்து வந்தன ரன்றித், தமக்கு ஏதொரு தாடர்புமில்லாத ஆரியர் தம் மூதாதைகளாகிய 'பிதுரர்’களையாதல், இற்றைக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஆரியக் குருக்கண்மாராலுந், தமிழ்நாட்டுக் குருக்கண் மாராலுங் கட்டி யெழுதப்பட்ட புராணங்களிற் புதிது புகுந்த அயன் படைப்பான ‘பிதுரர்’ களையாதல் வணங்கி வந்தவரல்லர். ஆரியக் குருக்கண்மார் புதிது து கட்டிய கட்டுப்பாட்டில் அகப்பட்டுத் 'திவசங்' கொடுக்கின்ற இஞ்ஞான்றைத் தமிழர்களுங்கூடத், தம் தாய் தந்தையர் பாட்டன் பாட்டியர், பூட்டன் பூட்டியரை நினைந்து அது செய்யக் காண்கின்றிலேம். இதனாலும், பரிமேலழகியாருரை பண்டைத் தமிழ்வழக்குக்காதல் பின்றைத் தமிழ்வழக்குக் காதல் சிறிதும் இசைந்து நில்லாமை, இதனை நடுநின்று காண்பாரெவர்க்கும் நன்கு விளங்கா நிற்கும்.

இனி, ஆரியர் தம் மூதாதைகளை வழிபடும் முறையும் தமிழர் தம் மூதாதைகளை வழிபடு முறையுந் தம்மிற் பெரிதும் வேறுபடுவ வென்பது காட்டுதும். ஆரியர்க்கு மிகப் பழைய நூலாகிய இருக்கு, எசுர், சாமம், அதர்வம் முதலிய நான்கு வேதங்களிலேனும், அவற்றின்கட் சொல்லப்பட்ட வேள்விகள் இங்ஙனம் வேட்கற்பால என அவற்றின் முறை களை விரித்து அவ்வேதங்களுக்கு உரை நூல்களாய் எழுந்த பிராமணங்களிலேனும் உயிர்களுக்கு ஊழ்வினையும் மறு பிறவிகளும் உண்டென்பது எட்டுணையுங் காணப்பட வில்லை. அதனால், இறந்த உயிர்கள் தாஞ்செய் ஊழ் வினையால் மீளப் பிறக்கும் என்னும் உண்மையைப் பண்டை நாளில் ருந்த ஆரியர்கள் சிறிதும் உணர்ந்தவரல்ல ரென்பது நன்கு புலனாகும். ஆகவே, இறந்து இயமனுலகை யடைந்த தம் முன்னோர்கள் எஞ்ஞான்றும் இன்பம் நுகர்ந்தபடியாய் ஆண்டிருப்பரெனவே அவர்கள் நம்பி வந்தார்கள். அவ்வாறு கொண்ட தமது நம்பிக்கைக்கு ஏற்பவே, இறந்து சென்ற தம் பெற்றோர்க்கும் மூதாதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/180&oldid=1585772" இலிருந்து மீள்விக்கப்பட்டது