உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

மறைமலையம் 19

யர்க்குஞ், சோமச்சாறு பால் தேன் சுரா நெய் முதலியவை களையுந் தாம் உணவாக அருந்திவந்த விலங்கின் இறைச்சி களையும் படைத்து, நாடோறுஞ் செய்யப்படுவதாகிய 'பிதிர்யஞ்ஞத்'தையுந், திங்கடோறுஞ் செய்யப்படுவதாகிய 'பிண்டபிதிர்யஞ்ஞத்'தையும், ஆண்டுதோறுஞ் செய்யப்படுவ தாகிய சிரார்த்தத்தையுஞ் செய்து,

66

'தூய புல்லின்மேல் அமர்ந்திருக்கும் மூதாதையரே, வந்து எமக்கு உதவி செய்க; இப்படையலை நுங்களுக்காகச் செய்து வைத்தோம்; அவற்றை ஏற்றுக் கொள்க.

மிக மங்களமான விருப்பத்துடன் வந்து, சிறிதும் வருத்த

மின்றி எங்களுக்கு உடம்பின் நலத்தையுஞ் செல்வத்தையுந் தந்திடுக!” (இருக்கு 10, 15, 4)

என்று அவர்களை வேண்டிக் குறையிரந்து வந்தார்கள்.

இதுவேயுமன்றிப் பழைய ஆரியர்கள் இறந்துபோன நம்மவர்க்குச் செய்து போந்த சவச்சடங்கிற்குந், தமிழ் நாட்டவர் செய்து போந்த சவச் சடங்கிற்கும் உள்ள மாறுபாடு பெரிய தொன்றாய்க் காணப்படுகின்றது. இறந்து போன தம்மவர் உடம்பை ஆரியர் தீயிலிட்டுக் கொளுத்து தற்குமுன், முதலில் ஒரு வெள்ளாட்டையும் அதன் பின் ஓர் ஆவையும் (பசுமாட்டையுங்) கொன்று, அவற்றின் உட ம்பி லிருந்தெடுத்த ஊனையுங் கொழுப்பையும் எலும்பின் மூளையையும் அப்பிணத்தின்மேல் முற்றும் பொதிந்து, அதன்பின் அதனைத் தீயிலிட்டுக் கொளுத்தி வந்தன ரன்பது இருக்குவேத க0ஆம் மண்டிலத்து ககூஆம் பதிகத்தில் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. இவ்வாறு செய்வதனால், நெருப்பானது இறந்தவன் உடம்பைச் சுடாதென்று பழைய ஆரியர் நம்பி வந்தனர். இங்ஙனம் பிறவுயிரின் ஊனைப் பொதிந்து தம்மவர் உடம்பை எரித்தால், அவருடம்பை நெருப்புச் சுடாதென்று நம்பின ஆரியர், இறந்து இயமனுலகு சென்ற தம்மவர் எப்போதும் அங்கிருந்த படியே இன்பம் நுகர்ந்திருப்ப ரெனவும், அவர் பொருட்டுத் தாம் இங்கே படைக்கும் ஊனும் உணவும் இயமனுலகி லிருக்கும் அவர்கள்பாற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/181&oldid=1585773" இலிருந்து மீள்விக்கப்பட்டது