உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை :

149

சென்று அவர்கட்கு உண்டியாகப் பயன்படுமெனவும் நம்பி வந்தது வியப்பன்று; ஏனென்றால், “அம்புலியில் ஒளவையார் நூல் நூற்கின்றார்" என்றால், அதனை நம்புகின்றவர் கூட்டமும் இங்கு மிகுதியாய் இருக்கின்றதன்றோ?

மற்றுத், தமிழ்மக்களோ பண்டைக்காலந் தொட்டு "இறந்தவுயிர் மீளப் பிறக்கும்” என்னும் உண்மையைக் கண்டறிந்தவர் ஆவர், முற்பிறவிகளிற் செய்த வினைகள் ஒரு தொகுதியாய் 'ஊழ்” என நின்று பிற்பிறவிகளுக்குக் காரணமாதலை அவர்கள் நன்கறிந்து, அதனைப் “பால்வரை தெய்வம்” என வழங்கி வந்தமை, தமிழர்க்குரிய மிகப் பழைய நூலாகிய தொல்காப்பியத்தால் தெளியப்படும், இறந்த வுயிர்கள் தாஞ்செய்த தொகுத்த ஊழ்வினைக்குத் தக மறு பிறவிகளிற் செல்லும்இவ்வுண்மையைக் கண்டறிந்தமையாற், பண்டைத் தமிழ்மக்கள் இறந்துபட்ட தம் பெற்றோர்க்கும் பாட்டன் பாட்டியர்க்கும் ஊணும் உடையும் படைத்து, அவற்றை ஆரியப் பார்ப்பனர்க்குக் கொடுத்தலாகிய சிரார்த்தத்’தைச் சிறிதுஞ் செய்தவரல்லர். இப் பிறவியில் ப் நமக்குத் தாய் தந்தையரா யிருந்தவர் இதனை விடுத்து மறுபிறவியில் வேறு தாய் தந்தையர்க்குப் பிள்ளைகளாய்ப் பிறக்கின்றனரல்லரோ? இது நாலடியாரிற் போந்த

66

எனக்குத் தாயாகியாள் என்னைஈங் கிட்டுத்

தனக்குந்தாய் நாடியே சென்றாள் - தனக்குந்தாய் ஆகி யவளும் அதுவானால் தாய்த்தாய்க் கொண் டேகும் அளித்திவ் வுலகு

وو

15

என்னுஞ் செய்யுளாலும், ஆசிரியர் மெய்கண்ட நாயனார் தாம் அருளிச் செய்த சிவஞானபோதச் செம் பொருணூலிற்,

“கண்ட நனவைக் கனவுணர்விற் றான்மறந்து

விண்படர்ந்தத் தூடு வினையினாற், கண்செவிகெட் டுள்ளதே தோற்ற உளம் அணுவாய்ச் சென்றுமனந் தள்ள விழுங்கருவிற் றான்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/182&oldid=1585774" இலிருந்து மீள்விக்கப்பட்டது