உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

மறைமலையம் 19

என்றறிவுறுத்தியவாற்றானும் நன்கு தருட்டப்படுதல் காண்க. இதுவேயுமன்றி, வடநாட்டில் உள்ள இராமகாளி யென்னுஞ் சிறு பெண்பிள்ளையும், வேறு சிறார் சிலருஞ் சிலபல ஆண்டுகளுக்குமுன் தாம் பிறந்திருந்த பிறவிகளின் வரலாறுகளை நினைவு கூர்ந்து சொல்ல அவ்வரலாறுகள் அத்துணையும் உண்மையா யிருத்தலை அப்பக்கங்களில் உள்ளார் கண்கூடாய் அறிந்திருக்கின்றனர் அல்லரோ? ராமகாளி என்னும் அப்பெண் முற்பிறவியிற் பெற்ற மக்கள், அவளை நோக்கிச் செய்து பார்ப்பனர்க்குக் கொடுத்த ஊணும் உடையும் பிறபண்டங்களும் அவளுக்கு இப் பிறவியில் வந்து பயன்பட்டனவா? சிறிதும் இல்லையே, அதுபோலவே, இறந்துபட்ட தம் தாய் தந்தையரை நோக்கி நம்மனோர் இப்போது செய்யுஞ் சிரார்த்தமும், அதிற் பார்ப்பனர்க்கு அவர்கள் வழங்கும் பண்டங்களும் வேறு பிறவிகளிற் சென்று பிறந்திருக்கும் அவர்களுக்குச் சிறிதும் பயன்படாவென்பது திண்ணம். இவ் வுண்மைகண்டே வேத நூற் புலமையிற் சிறந்த தயானந்தசரசுவதி சுவாமிகளும் தாம் இயற்றிய சத்தியார்த்தப் பிரகாசிகையின்கண், இறந்துபட்ட தம் மவரை நோக்கி நம்மனோர் சிரார்த்தஞ் செய்து பார்ப்பனர்க்கு உணவுப் பண்டங்களும் பிறவும் வழங்கல் பயனற்றதென வற்புறுத்தி வரைந்திருக்கின்றார். ஊழ் வினையும் அதனாற் பிறவிகள் அடுத்தடுத்து வருதலும் அறியாத பண்டையாசிரியர், தம் மூதாதையர் எஞ்ஞான்றும் யமனுலகில் இருப்பரென நம்பினராகலின், அவர் அவ் வறியா நம்பிக்கையால் தம் மூதாதையரை நோக்கிச் சிரார்த்தங் கொடுத்தது வாய்வதேயாம். மற்று, நம் பண்டைத் தமிழ்மக்களோ மிகப் பழைய நாளிலேயே ஊழ்வினையின் இயல்பும், அதனால் உயிர்கள் அடுத்தடுத்துப் பிறவிகளிற் சேறலும் நன்காராய்ந்து கண்டவராகலின், அவர்கள் தம் மூதாதையரை நோக்கிச் சிரார்த்தங் கொடுத்திலர். மற்று, அவர் தமது பண்டைத் தமிழகத்திலிருந்து உலகமெங்கணும் நாகரிகத்தைப் பரவச்செய்த தம் முன்னோர்கள் அனைவரை யுமே பொதுவாகத் 'தென் புலத்தார்' எனக்கொண்டு அவரை நினைவு கூர்ந்து நன்றிக் கடன் செலுத்தி வந்தனரென்பதே தேற்றமாம், இதுவே தென்புலத்தாரை ஓம்புதலாகு மென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/183&oldid=1585775" இலிருந்து மீள்விக்கப்பட்டது