உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை :

திருக்குறள் கூறிற் றென்க.

151

அதனாலன்றோ, சிரார்த்தங் கொடுக்கும் முறைகளை வடமொழிக்கண் உள்ள மிகுதி நூல்கள் கூறுமாப் போற், பழைய தமிழ் நூல்கள் எவையுங் சிறிதுங் கூறாவாயின. “சிரார்த்தம்’ 'திதி', 'திவசம்' முதலிய சொற்கள் வடமொழியே யன்றித் தமிழ்மொழி யல்லாமையுந், தமிழர்க்குள் அவ் வீண் வழக்கம் இல்லாமையின் அதனைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லும் இல்லாமையும் யாங்கூறும் இவ்வுண்மைக்கு உறுபெருஞ் சான்றா மென்க.

அற்றேற், பிதுரர்கள் தென்புலத்தில் உள்ளவர்களாகக் கூறும் வழக்கு யாங்ஙனம் வந்தது? எப்போது வந்தது? என்று அறிய விரும்புவார்க்கு, அவ்வரலாற்றினையும் ஈண்டொரு சிறிது விளக்கிக் காட்டுதும், தேவர்கள் உறையுந் துறக்க வுலகம் வடகிழக்கில் உள்ள தெனவும், பிதுரர்கள் உறையும் பிதுரவுலகந் தென்கிழக்கில் உள்ளதெனவுங் கொள்ளும் வழக்கு முதன் முதற் சதபதபிராமணத்திலே தான் காணப்படுகின்றது. ச் சதபத பிராமணம் இயற்றப்பட்ட காலத்தில், ஆரியர்கள் பெருந் தொகையினராகத் தென்றமிழ் நாட்டிற் குடிபுகுந்திலரேனுந், தென்றமிழ்நாட்டிலிருந்து வடநாடு சென்று போந்த தமிழ்மக்கள் வாயிலாகவும், வடநாட்டிலிருந்து தென்றமிழ்நாடு புகுந்து திரும்பிய தமிழ் மக்கள் வாயிலாகவுந் தமிழ்மக்களின் நாகரிக வரலாறுகளை அறிந்துகொண்ட பண்டை அவ்வாரியர்கள் தாம் இயற்றிய இந் நூலின்கண் தமிழர் வணங்கிய முழு முதற்கடவுளையும், அவர்தம் வழக்கவொழுக்கங்களையுஞ் சிறிது சிறிதாகத் தழுவி யுரைக்கலாயினரென்பது ஆராய்ச்சியாற் புலனா கின்றது. தெற்கிருந்து வடநாடு தொடுத்து இவ்விந்தியநாடு முற்றும் அஞ்ஞான்று தமிழ் மக்களே நிரம்பியிருந்தன ரென்பது இஞ்ஞான்றை வரலாற்று நூலாசிரியர் நடுநின்று ஆராய்ந்தெழுதியிருக்கும் நூல்களால் தெற்றென விளங்கா

நிற்கும்.’

""

பாண்டவர் ஐவர்க்குங் குருகுலமன்னர் நூற்றுவர்க்கும் பதினெட்டு நாள் வரையிற் பெரும்போர் நடந்த ஞான்று, பாண்டவர்க்கு நண்பனுந் தென்றமிழ்நாட்டுச் சேரமன்னனு மான உதியஞ்சேரலாதன் என்பான். அப்பாண்ட

வர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/184&oldid=1585776" இலிருந்து மீள்விக்கப்பட்டது