உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

மறைமலையம் 19

படைக்கு அப் பதினெட்டுநாளும்அறச்சோறு வழங்கிப், 'பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன்' என அக் காலத்துச் சான்றோர்களால் உயர்த்துப் பேசப் பட்டமை முரஞ்சியூர் முடிநாகராயர் பாடிய மண்டிணிந்த நிலனும்' என்னும் புறநானூற்று முதற்செய்யுளால் நன்கறியக் கிடக்கின் றதன்றோ? இவ்வுதியஞ் சேரலாதன் மகனாகிய பல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் பதிற்றுப்பத்தின் கண் மூன்றாம் பத்திற் புகழ்ந்துபாடிய கோதமனார் என்னும் நல்லிசைப் புலவரே பாண்டவரில் முதல்வனான தரும புத்திரனையும் புகழ்ந்துபாடிய “விழுக்கடிப்புஅறைந்த' என்னுஞ் செய்யுள் ஒன்றும் ‘புறநானூற்'றிற் காணப்படுகின்றது. இங்ஙனமே வான்மீகியார், மார்க்கண்டேயனார் என்னும் நல்லிசைப் புலவர்கள் பாடிய செய்யுட்களும் 'புறநானூற்'றின்கட் காணப்படுகின்றன (ஙருஅ ஙசுரு). "இனித் தமிழ்ச்செய்யுட் கண்ணும், இறையனாரும் அகத்தியனாரும் மார்க்கண்டேய னாரும் வான்மீகனாருங் கௌதமனாரும் களதமனாரும் போல்வார் செய் சய்தன தன தலையாய ஒத்து” என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் புறத்திணையியல், உஎ ஆஞ் சூத்திரவுரையிற் கூறுதல்கொண்டு, மேற்கூறிய முரஞ்சியூர் முடிநாகராயருங், கோதமனாரும், வான்மீகி யாரும், மார்கண்டேயனாரும் யனாரும் எல்லாம் பாண்டவர் காலத்தவரென்பது உய்த்துணரக் கிடக்கின்றதன்றோ? ஆகவே, வடக்கே பாண்டவ அரசர் இருந்த மிகப் பழைய க காலத்தே, இத்தென்னாட்டின்கண் மட்டுமேயன்றி, அவ் வட நாடெங்கணுந் தமிழ்மக்களுந் தமிழ் மன்னர்களுந் தமிழ்ச்சான்றோர்களும் நிறைந்திருந்தனரென்பது பண்டைத் தமிழ்ச் செய்யுள் வரலாறுகளானும் நன்கறியக் கிடக் கின்றமை காண்க.

கி

இனிப் பழையநாளில் வடக்கே குடிபுகுந்த ஆரியர் தமிழ்மொழியின் இயல்பையும் அமைப்பையும் நோக்கியே தமது ஆரியமொழியினைச் சீர்திருத்தி, ஏராளமான தமிழ்ச் சாற்களையுந் தம்முடைய ஆரிய நூல்களிற் புகுத்தின ரென்னும் உண்மை இப்போது வடமொழி வல்ல மேல் நாட்டாசிரியர்களாலே நன்கெடுத்துக் காட்டப்பட்டு

வருகின்றது.

அரை நூற்றாண்டுக்கு முன்னமே கால்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/185&oldid=1585778" இலிருந்து மீள்விக்கப்பட்டது