உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை :

153

வெல்(Dr.Caldwell) என்னும் ஆசிரியர் தாம் அரிதாராய்ந் தெழுதிய ‘திராவிட மொழிகளின் இலக்கண ஆராய்ச்சி’ என்னும் விழுமிய நூலில், தமிழ்மொழி ய வ்விந்திய நாடெங்கணும் அதற்கப்பாலும் பரவியிருந்த உண்மையினை எவரானும் மறுக்க இயலாத அரியபெரிய சான்றுகளால் நன்கு நிறுவியிருக்கின்றார். அவரெடுத்துக் காட்டிய பல சான்றுகளுள், நாவிற் பிறக்கும் மெய்யெழுத்துக்கள் சில தமிழ்மொழியினத்திற்கே உரியனவென்றுந், தமிழருடன் வந்து கலவாதமுன் அவ்வெழுத்துக்களையுடையரல்லாத ஆரியர்கள், அவருடன் வந்து கலந்த பின்னரே அவற்றை யெடுத்துத் தம் மொழியிற் சேர்த்துக் கொண்டனரென்றுந் தெள்ளிதின் விளக்கிக்காட்டியிருக்கின்றார்.

இங்ஙனமெல்லாம் மேனாட்டாசிரியர் நடுநின்று மிக ஆழ்ந்தாராய்ந்துரைக்கும் உரை, இச் சதபதபிராமண ஆராய்ச்சியினாலும் மேலும் உரம்பெற்று உண்மையாக விளங்குதலை ஈண்டொரு சிறிது காட்டுதும். இருக்கு, எசுர், சாமம், அதர்வம் என்னும் நான்கு நூல்களில் எங்குங் காணப்படாத 'மகாதேவன்' என்னுஞ் சிவபிரான் றிருப் பெயர் இச் சதபதபிராமணத்தின் ஐந்தாங் கண்டத்திலேதான் (ங, ரு) முதன் முதற் காணப்படுகின்றது. இதுகொண்டு, நாகரிகத்திற் சிறந்த தமிழ் முதுமக்கள் வழிபட்டுவந்த சிவபிரானே எல்லாத் தேவர்க்கும் பெரியோன் என்னும் உணர்ச்சி இந்நூல் எழுதிய காலையிற்றான் ஆரியர்க்கு முதன்முதல் உண்டாயிற்றென்பது நன்கு புலனாம். தாம் வணங்கி வேண்டி வந்த தேவர்களெல்லாருந் தம்போற் பிறந்து இறக்கும் ம் மக்களுயிர்களே யல்லாமற் பிறந்திறவாச் சிவத்தோடு ஒத்தவராகா ரென்னும் மெய்யுணர்வு சதபத பிராமண காலத் தாரியர்க்கு உண்டாயது. அஞ்ஞான்று அவர் தமிழ் மேன்மக்களுக்கு அடங்கி அவர்க்கு அணுக்கராய் ஒழுகி, அவர்பால் அம் மெய்யுணர்வினைப் பெற்றமை யினாலேயாம். இவ் வுண்மை இச் சதபதபிராமணத்தின் இறுதிக்கண் உளதாகிய பிருகதாரணியகோபநிடதத்தை உற்று நோக்குதலாலும் நன்கு விளங்கும். 'கார்க்கிய பாலாகி' என்னும் ஆரியப் பார்ப்பனன் ‘அஜாத சத்துரு' என்னுந் தமிழ் மன்னனை யடுத்து அவனாற் சிவத்தினியல்பு அறிவுறுத்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/186&oldid=1585779" இலிருந்து மீள்விக்கப்பட்டது