உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

மறைமலையம் 19

பட்ட வரலாறு, இப்பிருகதாரணியகோபநிடதத்தின் கண்ணேயே விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது (உ,ச) தமிழ் அரசர்களையெல்லாம் அஞ்ஞான்றிருந்த ஆரியர் க்ஷத்திரியர்' என்று வழங்கின வரலாறுகளை எம்முடைய வேளாளர் நாகரிகம் என்னும் நூலிலுஞ் சாதி வேற்றுமை யும் போலிச் சைவரும் என்னும் நூலிலுஞ் சான்றுகளுடன் விளக்கிக் காட்டியிருக்கின்றேம்.

66

இன்னும், பண்டைத் தமிழர்கள் முழுமுதற்கடவுளை அப்பன் வடிவிற் சிவபிரானாக வைத்து வணங்கியது போலவே, அதனை அருள்நிலையான அம்மை வடி வில் வைத்துக் திருமாலாகவும் வணங்கிவந்தனர். ஆகவே, வடநாட்டின்கண் இருந்த தமிழரொடு கலந்து அவரது சிவ வழிபாட்டைத் தெரிந்துகொண்டு அதனைப் பாராட்டிய சதபத பிராமணகாலத்தாரியர், அவர் செய்து போந்த திருமால் வழிபாட்டையுந் தெரிந்து அதனையும் இந்நூலின் பதினான்காங் காண்டத்திற் சிறப்பித்துப் பேசியிருக்கின்றார். விஷ்ணு தேவர்களிற் சிறந்தோன்" என்னுஞ் சொற்றொடர் இதன்கட் காணப்படுகின்றது. 'விஷ்ணு' என்னுஞ் சொல் இருக்குவேதத்திற் காணப்படினும் ஆண்டது பகலவனையே குறிக்கின்றது. மற்றுச், சதபத பிராமணத்திலோ விஷ்ணு ஒரு தனித் தெய்வமாகவுந், தேவர்க்குள் நிகழ்ந்தபோரில் வெற்றி பெற்றுச் சிறந்த தலைமையுடையதாகவுஞ் சொல்லப்படு கின்றது. இவ்வாறு இத் தெய்வத்திற்கு ஆரியர் தலைமை காடுக்கத் துவங்கியது, அவர் தமிழரது திருமால் வணக் கத்தைத் தெரிந்துகொண்ட பின்னரேயாமென்பது அறியற் பாற்று.

இன்னும், இதன் பத்தாங்காண்டத்தில் வேதங்கள் மூன்று (த்ரயீவித்யா) என்றே நுவலப்படுகின்றன. இதனை உற்றுநோக்குங்காற், சதபத பிராமணம் எழுதப்பட்ட காலத்தில் ஆரிய வேதங்கள் மூன்றே யிருந்தன வென்பதும், இதற்குப் பிற்பட்ட காலத்திலேதான் ஆரியர் அதர்வத்தை யுஞ் சேர்த்து அவற்றை நான்காக்கினரென்பதும், இவர் இங்ஙனந் தம் ஆரிய வேதத்தை நான்காக்கியது. தமிழர்கள் தமது வேதத்தை அஃது அறம் பொ பாருள் இன்பம் வீடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/187&oldid=1585781" இலிருந்து மீள்விக்கப்பட்டது