உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை :

155

நுகலுதல்பற்றி நான்கு கூறாக வழங்கியது கண்டேயா மென்பதும் இனிது விளங்கா நிற்கும்.

இன்னும், இந்நூலின் பதினான்காம் காண்டத்திலே சூத்திரம்' என்னுஞ் சொன் முதன்முதற் காணப்படுகின்றது. இதற்கு முற்பட்ட இருக்கு முதலான பழைய அரிய நூல்களில் யாண்டும் இச்சொற் காணப்படுகின்றிலது. பண்டையாரிய நூல்களில் ஓரிடத்துங் காணப்படாத இச்சொல், முதன் முதல் இச்சதபத பிராமணத்தின்கட் காணப்படுதலை ஆராய்ந்து பார்க்குங்கால், இந்நூல் இயற்றிய காலத்திருந்த ஆரியர் தமிழரொடு கலந்து, அவர் தம் நூலில் வழங்கிய சூத்திரம்' என்னுஞ் சொல்லையெடுத்து, இதன்கண் வழங்கிக் கொண்டாரென்பது தெற்றென விளங்கா நிற்கும். இச் சதபத பிராமணம் இயற்றப்படுதற்குப் பன்னூறாண்டு களுக்கு முன்னரே தோன்றியதாகிய தொல்காப்பியச் செந்தமிழ் நூலின்கண்,

“மேற்கிளந் தெடுத்த யாப்பினுட் பொருளொடு சில்வகை யெழுத்தின் செய்யுட் டாகிச் சொல்லுங் காலை யுரையகத் தடக்கி நுண்மையொடு புணர்ந்த வொண்மைத் தாகித் துளக்க லாகாத் துணைமை யெய்தி அளக்க லாகா அரும்பொருட் டாகிப் பல்வகை யானும் பயன்றெரி புடையது சூத்திரத் தியல்பென யாத்தனர் புலவர்”

(மரபியல் 100)

என்று போந்த சூத்திரத்தாற் ‘சூத்திரம்' என்னுஞ் சொல்லும், அதனால் உணர்த்தப்படும் பாவின் இலக்கணமும் நன்கு அறிவுறுத்தப்பட்டமை காண்க. இவ்வாற்றாற் ‘சூத்திரம்’ என்பது தனித்தமிழ்ச் சொல்லே யாதலும், அதனைத் தமிழ் மக்களிடமிருந்தெடுத்தே சதபத பிராமணகாலத் தாரியர் வழங்கிக்கொண்டாராதலும் ஐயுறவுக்கு இடமின்றி நிறுவப் படுதல் காண்க.

இன்னும், தெற்கே தமிழ்நாட்டின் ஒரு பெரும் பகுதி யாகிய குமரிநாடு கடல்கொண்டழிந்த வரலாறு, இச்சதபத பிராமணத்தின் முதற் காண்டத்தின்கண் (அ, க, க) விரிவாகச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/188&oldid=1585782" இலிருந்து மீள்விக்கப்பட்டது