உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

மறைமலையம் 19

சொல்லப்பட்டிருத்தலால், இந்நூல் அக் கடல்கோளுக்குப் பின்னர் இயற்றப்பட்டமையும், இதனை அக்காலத்து ஆரியர் வடநாடு போந்த தமிழர் பாற் கேட்டுணர்ந்து அதன்கட் குறிப்பிட்டமையும் நன்கு பெறப்படும்.

அதுவேயுமன்றிப், பாண்டவர் ஐவர் காலத்திற்குப் பின் இச்சதபத பிராமணம் இயற்றப்பட்டதென்பதற்கு, அசுவ மேதஞ் செய்து கொலைப் பாவத்தைக் கழுவிக் கொண்டவ ராகச் சொல்லப்படும் 'ஜநமேஜய’ மன்னனும் அவனுடன் பிறந்தாரான ‘பீமசேனன்’, ‘உக்கிரசேனன்’ ‘சுருதசேனன்’ என்னும் மூவரும் இதன் ககூஆங் காண்டத்திற் சொல்லப் பட்டிருத்தலே உறுபெருஞ் சான்றாம். இம்மன்னர் நால்வரும் பாண்டவ அரசரின் வழித்தோன்றல்கள் ஆதல். பாரதக் கதையினை யுணர்ந்தார் எவரும் நன்கறிவர். எனவே, தலைச்சங்கத்திருந்து தமிழாராய்ந்தவரும், பாண்டவர் காலத்தவனான பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனுக்கு நண்பரும் ஆன முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர் பெருமான் காலத்திற்குச் சிறிதேறக்குறைய ஒரு நூற்றாண்டு கழிந்த பின்னரே 'சதபத பிராமணம்' இயற்றப்பட்டதாகல் வேண்டுமென் றுணர்ந்துகொள்க.

66

மேலுஞ், சதபத பிராமணத்திற் குறிக்கப்பட்ட தமிழ் நாட்டுக் கடல்கோளுக்கு முன் ‘பஃறுளி' யாற்றங்கரைப் பக்கத்தே பாண்டியன் பல்யாகசலை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் வேந்தர் பெருமான் அரசு செலுத்தின வரலாறு, மேலெடுத்துக் காட்டின ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்” என்னும் புறநானூற்றுச் செய்யுளால் இனிது விளங்குதலிற், சதபத பிராமணகாலம் இப்பண்டைப் பாண்டி வேந்தன் காலத்திற்கும் பிற்பட்டதாதல் தெற்றெனப் புலனாம். அத்துணைப் பழைய காலத்திருந்த இப்பாண்டி வேந்தன் சிவபிரான் றிருவடிக்கண் மிக்க அன்புடையனா

யிருந்தனனென்பது,

“பணியியரத்தை நின்குடையே முனிவர்

முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே

என்று காரிகிழார் என்னும் புலவர் பெருமான் அவனைச் சிறப்பித்துப் பாடிய புறநானூற்றுச் செய்யுளால் (சா) நன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/189&oldid=1585784" இலிருந்து மீள்விக்கப்பட்டது