உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை

157

குணரப்படும். சிவநேயத்திற் சிறந்த இப்பாண்டிய மன்னனை அக்காலத்திருந்த ஆரியக் குருமார் தம் வயப்படுத்தி, அவன் பல யாகங்களைச் செய்யும்படி தூண்டிவிட்டனரென்ப தனால், அவ்வாரியக் குருமார் அத்துணைப் பழைய நாளிலேயே நம் தமிழ்நாடு புகுந்து நம் அரசர்களையுஞ் சல்வர்களையுந் தம் வயப்படுத்தித், தமது வேள்விச் சடங்குக்கு அவர்களை உடன்படுத்திக் கொண்டமை நன்கு புலனாகின்றதன்றோ? இவ்வாறு அவ்வேந்தன் ஆரியக் குருமார் சூழலில் அகப்பட்டுப் பல வேள்விகளைச் செய்ததனாலேயே 'பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமி’ எனப் பெயர் வழங்கப் பெற்றான்.

6

இங்ஙனமாக, ஆரியக் குருமார் மிகப் பழைய நாளி லேயே வடநாட்டிலிருந்த தமிழ்மன்னர்களான பாண்டவர் முதலாயினாரைத் தம் வயப்படுத்திக் கொண்டாற்போலவே, அவர் தென்றமிழ்நாடு புகுந்து இங்கிருந்த வேந்தர்களையுந் தம் வயப்படுத்திக் கொண்டார். ங்ஙனம், இவர் தமிழ் வேந்தர்களைத் தம் வயப்படுத்திக் கொண்டாலும், அவர்க் குரிய கடவுள் வழிபாடும் ஏனை நல்லொழுக்க முறைகளும் மிக விழுமியவாய் இருந்தமையின், அவை தம்மை அழிக்க மாட்டாராய்ச், சில திரிவுபாடுகளுடன் அவற்றைத் தாமுங் கைக்கொண்டு, தம் நூல்களில் வரைந்துவைத்து ஒழுக லாயினர். இவ்வாறவர் தமிழர்பா லிருந்தெடுத்துத் தாம் கைக்கொண்ெ L ஈழுகிய ஒழுகலாறுகள் பலவற்றுள் 'தென்புலத்தார்’ கடனும் ஒன்றாகும்.

66

இனி, இச்சதபத பிராமண காலத்திற்கு முற்பட்டவ னாகிய ‘பாண்டியன் பல்யாகசலை முதுகுடுமிப் பெருவழுதி' மேல் நெட்டிமையார் என்னும் நல்லிசைப் புலவர் பாடிய ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் என்னுஞ் செய்யுளில், தென்புலத்தார்க்கு நன்றிக்கடன் செலுத்துந் தமிழரின் ஒழுகலாறு நுவலப்பட்டிருத்தலின், ச்சதபத பிராமணம் இயற்றப்படுதற்கு முன்னமே நம் பண்டைத் தமிழ்மக்கள் தெற்கே குமரி நாட்டிலிருந்த தம் மூதாதையரை ருங்கே நினைந்து இறைவனை வழிபட்டு வந்தமை தெற் றென விளங்கா நிற்கும். இங்ஙனந்தெற்கிருந்த தம் மூதாதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/190&oldid=1585785" இலிருந்து மீள்விக்கப்பட்டது