உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

மறைமலையம் 19

யர்க்கு நன்றிக்கடன் செலுத்தி வந்த தமிழரது ஒழுகலாறு, இருக்கு எசுர் முதலான மிகப் பழைய ஆரிய நூல்களுள் யாண்டும் நுவலப்படாமையின், அக்காலத்து ஆரியர்க்கு அது தெரியாதென்பதூஉம், மற்று அந்நூல்களுக்குப் பிற் பட்டு வந்த சதபத பிராமணத்தில் அவ்வொழுகலாறு நுவலப்பட்டிருத்தலின் அப்பிற்காலத் தாரியர்க்கே அது தெரியலாயிற்றென்பதூஉம் ஐயுறவுக்கிடனின்றி நாட்டப் பட்டமை காண்க.

இனி, ஆரியர் இவ்விந்திய நாட்டிற் புகுந்தகாலந் தொட்டே, தமக்கு ஊண்கொடுத்து உடைகொடுத்து இருக்க உறையுள் கொடுத்துப் பலவகையால் உதவியாற்றி வந்த தமிழ்மக்களைத் ‘தஸ்யுக்கள்”, ‘தாசர்கள்”, ‘இலிங்கத்தை வணங்குபவர்கள்’, 'வேள்விச் சடங்கு செய்யாதவர்கள்’, அசுரர்கள்’, 'இராக்கதர்கள் இராக்கதர்கள்' என்று இகழ்ந்து வந்தமை யோடு, அவர்களைச் சுவடற அழித்து விட வேண்டு மென்றுந், தாம் வணங்கிய ‘இந்திரன்’, ‘வருணன்’ முதலான தேவர்களை ஓயாமல் வேண்டி வந்திருக்கின்றார்கள். இக் காலத்துந் தம்மைச் 'சாமி, 'சாமி” என்று பலவகையாற் காண்டாடித், தமக்கு வேண்டிய உதவிகளை யெல்லாஞ் சய்து வருந் தமிழ்மக்களை, அவ்வினத்தவர் ‘சூத்திரர்’ என்னும் மிக இழிவான சொல்லால் வழங்கிவருதல் எவரும் அறிந்ததன்றோ? இங்ஙனம் பண்டைநாள் தொட்டு இன்று காறும் ஆரியரும் அவர் குழுவிற் சேர்ந்து அவர் வண்ணமாயினாரும் தமிழரை நஞ்சாகப் பகைத்துவரும் வரலாறுகளை வேளாளர் நாகரிகம், சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் என்னும் நூல்களில் விரித்து விளக்கிக் காட்டியிருக்கின்றேம். இவ்வாறு தமிழர்பால் ஆரியர்க்கு இயற்கையேயுள்ள நச்சுப்பகைமை, இச்சதபத பிராமண காலத்து ஆரியர்மாட்டுங் காணப்படுகின்றது. ஆரியர்கள் தாம் தேவரெனவும், தாம் உறையும் வட திசைக் கண் மட்டுமே தேவர்கள் உறையுந் துறக்கவுலகம் உண் L னவுந், தாம் மட்டுமே அத்துறக்கவுலகு செல்லத் தம்மவ ரல்லாத தமிழர்களாகிய அசுரர்களெல்லாந் தெற்கேயுள்ள கூற்றுவனுலகு செல்வரெனவும் வரைந்திருக்கின்றனர்; அது வருமாறு:

L

இவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/191&oldid=1585786" இலிருந்து மீள்விக்கப்பட்டது